ஏன் தாலி அணிவதில்லை? ரசிகர்களின் கேள்விக்கு “குக் வித் கோமாளி” கனி பதில்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான கனி, ஏன் தாலி அணியவில்லை? என்ற ரசிகரின் கேள்விக்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
குக் வித் கோமாளி கனி:
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கனி, இவர் இயக்குனர் அகத்தியரின் மூத்த மகள் ஆவார். இவர் ஏற்கனவே தொகுப்பாளராக ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர். ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ பட இயக்குனர் திருவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உண்டு. குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு பெயர் பெற்ற இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – தொழில் முதலீட்டு கழக இயக்குனர் உத்தரவு!
அவ்வப்போது ரசிகர்களிடம் லைவ்வில் பேசுவார். மேலும் தியேட்டர் டி என்ற யூடியூப் பக்கம் மூலம் பொன்னியின் செல்வன் புதினத்தை கதையாக கூறி வருகிறார். அவ்வப்போது சமையல் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஏன் நீங்கள் தாலி அணிவதில்லை? என அவரிடம் சிலர் அடிக்கடி கேள்வி எழுப்புவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, தாலி என்பது தமிழ் கலாச்சாரத்தில் இல்லாத ஒன்று. இடையில் புகுத்தப்பட்ட ஒன்று என நான் நம்புகிறேன்.
TN Job “FB Group” Join Now
பெரியவர்கள் முன்னால் இவன் என் துணை, இவள் என் துணை என்று கூறி மாலை மாற்றி இணைந்துள்ளோம். அது தான் தமிழ் மரபு, நான் தாலி கட்டித் தான் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் 3 மாதங்களுக்கு பிறகு தாலி மாற்றிக் கட்டும்போது என் கணவர் கட்டாமல் வேறு யாரோ உறவினர்கள் கட்டினார்கள். எனக்கு என் கணவன் கட்டாதது உறுத்தலாக இருந்தது. வேறு யாரோ கட்டிய தாலி தானே என்ற உணர்வு ஏற்பட்டது. அதிலிருந்து நான் தாலி அணிவதில்லை. நீங்கள் அனைவரும் முதன்முதலில் கணவர் கட்டிய தாலியை பத்திரமாக வைத்திருக்கிறீர்களா? நான் வைத்துள்ளேன். என் கணவருடன், 8 வருட காதல் வாழ்க்கை, 12 வருட திருமண வாழ்க்கை என குழந்தைகளுடன் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அது தான் என் திருமணத்துக்கான அடையாளம் என்று நான் நினைக்கிறேன். தாலி போடுவது மட்டும் இல்லை. இது தான் என் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.