PF கணக்கில் 8.50% வட்டி – EPFO சந்தாதாரர்கள் சரிபார்க்கும் எளிய வழிமுறைகள் இதோ!

0
PF கணக்கில் 8.50% வட்டி - EPFO சந்தாதாரர்கள் சரிபார்க்கும் எளிய வழிமுறைகள் இதோ!
PF கணக்கில் 8.50% வட்டி - EPFO சந்தாதாரர்கள் சரிபார்க்கும் எளிய வழிமுறைகள் இதோ!
PF கணக்கில் 8.50% வட்டி – EPFO சந்தாதாரர்கள் சரிபார்க்கும் எளிய வழிமுறைகள் இதோ!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2020-21 நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி சேமிப்புக்கான 8.50% வட்டியை நேரடியாக கணக்கில் செலுத்தியுள்ளது. தற்போது கணக்கில் இருக்கும் தொகையினை எவ்வாறு சரி பார்க்கலாம் என்பதை பற்றிய விவரங்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

EPFO ஆணையம்:

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் கணக்கில் உள்ள வைப்பு தொகைக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவீதம் வட்டி தொகையை நிர்ணயிக்கிறது. அந்த பணம் PF கணக்கில் வரவு வைக்கப்படும். 2018-2019 ம் நிதியாண்டில் PF தொகைக்கான வட்டி 8.65% ஆக இருந்தது. 2019-2020ம் நிதியாண்டில் மத்திய அரசு இந்த வட்டி விகிதத்தை 8.5% ஆக குறைத்து விட்டது. இந்நிலையில் 2020-2021ம் நிதியாண்டிற்கும் மாற்றம் இன்றி இன்றி அதே வட்டி விகிதமான 8.5% வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, அறிவிப்பின் படி 2020-21 நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி சேமிப்புக்கான வட்டியை நேரடியாக 6.47 கோடி PF கணக்குகளில் செலுத்தியுள்ளது.

தமிழகத்தில் நவ.15 வரை இம்மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் – வானிலை அறிக்கை!

EPFO சந்தாதாரர்கள் தங்கள் PF கணக்கில் இருக்கும் தொகையை சரிபார்க்க மிஸ்டு கால் அழைப்பு, ஆன்லைன் போர்டல், UMANG பயன்பாடு அல்லது SMS போன்ற பல வழிகளின் மூலம் அவர்களின் PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அவர்கள் சரிபார்க்கலாம்.

மிஸ்டு கால் மூலம் PF கணக்கு தொகையை சரிபார்க்கும் முறை:

EPFO சந்தாதாரர்கள், தங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் அழைப்பு விடுக்க வேண்டும். அழைப்பு துண்டிக்கப்பட்டவுடன், அவர்களின் பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பு விவரங்கள் தெரிவிக்கப்படும்.

ஆன்லைனில் PF கணக்கு தொகையை சரிபார்க்கும் முறை:
  • முதலில்  epfindia.gov.in  என்ற EPFO ன் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் உள்ள இ-பாஸ்புக் இணைப்பிற்கு செல்ல வேண்டும். அப்போது, passbook.epfindia.gov.in URL உடன் புதிய பக்கம் தோன்றும்.
  • அங்கு உங்களின் UAN எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட வேண்டும்.
  • உங்களின் விவரங்களை உள்ளிட்ட பிறகு, புதிய பக்கத்தில் உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் – பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தல்!

  • இப்பொழுது உங்கள் PF கணக்கின் இருப்பை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
UMANG செயலி மூலம் PF கணக்கு தொகையை சரிபார்க்கும் முறை:
  • உங்கள் ஸ்மார்ட்போனில் UMANG செயலியைத் திறந்து EPFO என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • பணியாளர் சேவையை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில், ‘View Passbook’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • உங்கள் UAN எண், கடவுச்சொல் மற்றும் OTP ஐ உள்ளிட வேண்டும்.
  • உங்கள் விவரங்களைச் சரிபார்த்த பிறகு, உங்கள் PF கணக்கில் உள்ள இருப்பு தொகையை அறிந்து கொள்ளலாம்.
எஸ்எம்எஸ் மூலம் PF கணக்கு தொகையை சரிபார்க்கும் முறை:

EPFO சந்தாதாரர்கள் 7738299899 என்ற எண்ணுக்கு SMS மூலம் EPFOHO UAN ஐ அனுப்ப வேண்டும். இப்பொழுது உங்கள் PF கணக்கில் இருப்பு தொகையை உங்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த முறையில் அணுகுவதற்கு முன்னதாக உங்கள் பான் மற்றும் ஆதார் இரண்டும் PF கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!