ஒரே ரயில் டிக்கெட்டில் நாடு முழுவதும் சுற்றுலா – அடடா! சூப்பர் திட்டமா இருக்கே!
இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும் பொதுமக்கள் பலருக்கும் தெரியாத நிலையே நீடித்து வருகிறது. அதுபோன்ற ஒரு சிறப்பு திட்டத்தை இப்பதிவின் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.
சுற்றுலா பயண திட்டம்:
இந்திய ரயில்வே நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தேவையான போக்குவரத்து தேவைகளை நிவர்த்தி செய்து வருகிறது. விலை குறைவான பொது கம்பார்ட்மெண்ட் முதல் ஏசி ரக சொகுசு கூபே வரை பலவிதமான சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரே ஒரு ரயில் டிக்கெட்டின் மூலம் நாடு முழுவதும் 56 நாட்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் வகையில் ஒரு சூப்பர் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பயண டிக்கெட்டை எடுத்துக் கொள்வதன் மூலம் எந்த ரயிலிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிகள் 56 நாட்களுக்கு பயணம் செய்து கொள்ளலாம்.
சமையல் எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம் – என்ன காரணம்?
மேலும் தாங்கள் விரும்பும் எந்த வகுப்பில் வேண்டுமானாலும் பயணிக்க முடியும். இதற்கான கட்டணம் மிகவும் சாதாரண அளவில் தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிக்கெட்டை ரயில் கவுண்டரில் பெற்றுக் கொள்ள முடியாது. இதற்காக முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள பிரிவு வணிக மேலாளர் அல்லது நிலைய மேலாளர் அலுவலகத்தில் டிக்கெட் கோரிக்கை செலுத்தி சுற்றுலா பயணத்திற்கான டிக்கெட்டை பெற்றுக் கொள்ள முடியும்.