மத்திய அரசு துறைகளில் 5000 காலிப்பணியிடங்கள் – ரூ.92000 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
மத்திய அரசு துறைகளில் 5000 காலிப்பணியிடங்கள் - ரூ.92000 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசு துறைகளில் 5000 காலிப்பணியிடங்கள் - ரூ.92000 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசு துறைகளில் 5000 காலிப்பணியிடங்கள் – ரூ.92000 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசு அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

மத்திய அரசு அலுவகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகள், சட்டரீதியான அமைப்புகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இத்துறைகளில் எல்டிசி, இளநிலை அமைச்சக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், தபால் பிரிப்பு உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் உள்ளிட்ட 5000பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க அறிவியல், கணிதம் பாடப்பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவாராக இருக்க வேண்டும். அத்துடன் 18 முதல் 27 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதற்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இப்பணியில் சேருபவர்களுக்கு பதவிகளின் அடிப்படையில் மாத சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள மூலமாக ஆன்லைன் முறையில் மார்ச் 7ம் தேதிக்குள் பதிவு செய்து முடித்திருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். அத்துடன் மார்ச் 8ம் தேதிக்குள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி முடித்திருக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_01022022.pdf என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!