பிப்ரவரி மாதத்தில் மொத்தமாக 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் மூன்று நாட்கள் விடுமுறை இருக்கிறது. அது தொடர்பான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை:
இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை வங்கி தொடர்பான அனைத்து தகவல்களையும் ரிசர்வ் வங்கி தான் வழங்குகிறது. மேலும், வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு மொத்தமாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்கள் அனைத்தையும் சேர்த்து பிப்ரவரி மாதத்தில் மட்டுமே 11 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் – தகுதிகள் என்னென்னெ?
தற்போது இந்த மாதத்தில் மீதமுள்ள விடுமுறை நாட்களை காணலாம்.
- பிப்ரவரி 24, 2024: நான்காவது சனிக்கிழமை
- பிப்ரவரி 25, 2024: ஞாயிற்றுக்கிழமை
- பிப்ரவரி 26, 2024: நியோகம் காரணமாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை