தமிழக தனியார் பேருந்துகளில் 22% வரை கட்டணம் குறைப்பு – பொதுமக்கள் மகிழ்ச்சி!

0
தமிழக தனியார் பேருந்துகளில் 22% வரை கட்டணம் குறைப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி!
தமிழக தனியார் பேருந்துகளில் 22% வரை கட்டணம் குறைப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி!
தமிழக தனியார் பேருந்துகளில் 22% வரை கட்டணம் குறைப்பு – பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழக தனியார் பேருந்துகளில் அதிக பயண கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வந்தது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பு கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது.

பேருந்து கட்டணம்:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பையும் பெற்றது. இந்த திட்டம் வந்த பிறகு அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் போக்குவரத்து துறை நஷ்டத்தை சந்தித்தது. மேலும் பெண்கள் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோக்களில் செல்வது குறைந்தது.

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு – உங்களுக்கான அரிய வாய்ப்பு!

அதனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் வருவாய் இழப்பை சந்தித்தனர். ஏற்கனவே கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்றல் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதனால் தனியார் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை. பிறகு பேருந்துகள் இயக்கப்பட்ட போது கொரோனா கட்டுப்பாடுகளால் பயணிகள் வருகை குறைந்தது. இந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்காக பயண கட்டணங்களை அதிகரித்தது.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo

இதனால் அதிருப்தி அடைந்த பயணிகள் உடனடியாக பேருந்துகள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு தற்போது தனியார் பேருந்துகளில் கட்டணங்கள் 10-22% வரை குறைக்கப்பட்டுள்ளது. இனி கோவை: ரூ.1,815 முதல் ரூ.3,025 வரை சென்னை – மதுரை: ரூ.1,776 முதல் ரூ.2,688 சென்னை – நெல்லை: ரூ. 2,063 முதல் ரூ. 3,437 வரை வசூலிக்கப்படும் என்று தனியார் பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!