10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து நார்த் ஈஸ்டர்ன் எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து நார்த் ஈஸ்டர்ன் எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், பிளம்பர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக இருக்கும் இடங்களை தகுதியான நபர்களை கொண்டு நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உணவகங்கள், பொழுதுபோக்கு மன்றங்கள் இயங்கும் நேரம் நீட்டிப்பு – முக்கிய அறிவிப்பு!

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை NEEPCO நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆனால் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்படும். இப்பணியில் நியமிக்கப்படுவர்களுக்கு ரூ.14877 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் முறையில் பதிவு செய்யலாம்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டிம் ப்ரெஸ்னன் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இதையடுத்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இந்த விண்ணப்பப் படிவத்துடன் தங்களது ஐடிஐ சான்றிதழ், வயது சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பங்களை வருகிற பிப்ரவரி 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களை பெற https://neepco.co.in/sites/default/files/Website%20Advt_%20revised%20address.pdf என்ற லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். அதனால் வேலையில்லா இளைஞர்கள் இந்த வாய்ப்பை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!