நடப்பு நிகழ்வுகள் – 18 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 18 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 18 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் – 18 ஆகஸ்ட் 2023

தேசிய செய்திகள்

32,500 கோடி மதிப்பிலான ரயில்வே அமைச்சகத்தின் 7 முக்கிய மேம்பாடு திட்டத்திற்கு CCEA ஒப்புதல் அளித்துள்ளது.

  • மத்திய அரசின் நிதியுதவியுடன் கிட்டத்தட்ட 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டளவில் ரயில்வே அமைச்சகத்தின் ஏழு முக்கிய மேம்பாட்டு திட்டங்களுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது(CCEA) ஆகஸ்ட் 16 2023 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த மேம்பாடு திட்டங்களானது ரயில்வே துறையின் செயல்பாடுகளை மக்களுக்கு எளிதாக வழங்குவதையும் மற்றும் அதில் உள்ள சிக்கல்கள் மற்றும் நெரிசலைக் குறைப்பதையும், துறையில் தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்குவதையும் நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளதாகும். மேலும் இந்த திட்டங்களானது கிட்டத்தட்ட 35 மாவட்டங்களை உள்ளடக்கி அதன் வளர்ச்சியை மேம்படுத்துவதை உறுதி செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாரம்பரிய கைவினைஞர்களை ஆதரிப்பதற்காக ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  • 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டளவில் இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற-பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் அவர்களின் திறமையை ஆதரிப்பதற்கான PM விஸ்வகர்மா மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் ஆகஸ்ட் 2023 இல் ஒப்புதல் அளித்துள்ளது. 
  • கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் தங்கள் கைகள் மற்றும் கருவிகளுடன் பணிபுரியும் அவர்களின் பாரம்பரிய திறன்களின் குடும்ப அடிப்படையிலான வாழ்க்கை நடைமுறையை வலுப்படுத்தி அவற்றை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளதாகும். இது 5 ஆண்டு கால திட்டம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான விளையாட்டுத்துறையில் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  • மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் சுகாதாரம் மற்றும் முதியோர் பராமரிப்புத்துறை ஆகியவை இரு நாடுகளுக்கிடையேயான விளையாட்டுத்துறையின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 16 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இரு நாடுகளுக்கிடையேயான விளையாட்டுத் துறையில் இருதரப்பு பரிமாற்றத் திட்டங்கள்,  தடகள மற்றும் பயிற்சியாளர் பயிற்சி மற்றும் மேம்பாடு, விளையாட்டு அறிவியல், விளையாட்டு நிர்வாகம் மற்றும் ஒருமைப்பாடு மற்றும் அவற்றின் அடிமட்ட பங்கேற்பு ஆகியவற்றில் அறிவு மற்றும் நிபுணத்துவத்தை விரிவுபடுத்த உதவுவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளதாகும்.

சர்வதேச செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் நவீன பென்டத்லான் கூட்டமைப்பானது  நாட்டின் விளையாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

  • தடை ஓட்டப் பிரிவு, எபி ஃபென்சிங், லேசர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவு, 200 மீட்டர் நீச்சல் பிரிவு மற்றும் ஓட்ட பந்தய பிரிவு ஆகிய ஐந்து பிரிவுகளில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக துபாய் காவல் தடகள அமைப்பானது ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுசார் நவீன பென்டத்லான் கூட்டமைப்புடன் ஆகஸ்ட் 2023 இல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • விளையாட்டு துறையில் வரையறுக்கப்பட்ட முக்கிய நோக்கங்களை திறம்பட நிறைவேற்றுவதற்கு கூட்டு பணிக்குழுக்களை நிறுவுவதும் அதன் பகிரப்பட்ட இலக்குகளை திறன்பட அடைவதையும் நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் வியட்நாம் நாடுகளுக்கிடையேயான முதல் நேரடி விமான சேவைகளை தொடங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • இஸ்ரேல் மற்றும் வியட்நாம் நாடுகளுக்கிடையேயான முதல் நேரடி விமான சேவையானது தொடங்குவதற்கான திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒரு பகிர்மான ஒப்பந்தத்தில் ஆகஸ்ட் 16 அன்று வியட்நாம் நாட்டின் ஹனோய் பகுதியில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த பகிர்மான ஒப்பந்தமானது இஸ்ரேலின் பொருளாதார அமைச்சர் நிர் பர்கட் மற்றும் வியட்நாமின் முக்கிய பிரதிநிதி Nguyen Hong Dien ஆகியோர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும். இதன்படி வியட்நாமின் ஹனோய் மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் இடையேயான வணிக விமானங்கள் அக்டோபர் மாதத்திலிருந்து தொடங்கப்பட உள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகும்.
  • மேலும் இரு நாடுகளுக்கிடையே கடந்த ஜூலை மாதம் “ஒரு தடையற்ற வர்த்தகதிற்கான ஒப்பந்தமானது” மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில செய்திகள்

விப்ரோ நிறுவனமானது IIT-டெல்லியில் புதுமையான AI க்கான புதிய சிறப்பு மையம் தொடக்கம்.

  • மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குனரான விப்ரோ நிறுவனமானது, ஆகஸ்ட் 16 அன்று IITடெல்லி வளாகத்தில் உள்ள யார்டி ஸ்கூல் ஆஃப் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸில்(ScAI) அமைப்பினை மேம்படுத்துவகற்காக தனது புதுமையான AI தொழில்நுட்பத்திற்கான ஒரு சிறப்பு மையத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்த மையமானது பல்கலைக்கழகத்துடனான இந்நிறுவனத்தின் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, “திறமைகளை வளர்ப்பது, அடித்தளமான மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சிக்கு ஆதரவளித்தல் மற்றும் துறையில் கலையின் நிலையை விரிவுபடுத்துதல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு சிறப்பு அங்கீகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் ஆளில்லா விமான சோதனைக் கூடமானது தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது.

  • பாதுகாப்பு சோதனை உள்கட்டமைப்பு திட்டத்தின் (DTIS) கீழ் இந்தியாவின் முதல் ஆளில்லா வான்வழி அமைப்புகளுக்கான(Drone) பொது சோதனை மையமானது தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தால்(TIDCO) தமிழகத்தில் நிறுவப்படும் என தனது ஆகஸ்ட் மாத அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • வான்-விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் தங்கள் இந்திய செயல்பாடுகளை அமைப்பதற்கு விருப்பமான இடமாக தமிழகத்தை இந்த மையமானது மாற்ற உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் வடகலில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் கிட்டத்தட்ட 2.3 ஏக்கர் பரப்பளவில் இந்த மையமானது அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘என் வங்காளம், அடிமையாதல் இல்லாத வங்காளம்’ என்ற முன்னெடுப்பானது தொடங்கப்பட்டுள்ளது.

  • இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 17 அன்று மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனில் ‘நாஷா முக்த் பாரத் அபியான்’ என்ற திட்டத்தின் கீழ் “எனது வங்காளம், அடிமையாதல் இல்லாத வங்காளம்” என்ற முன்னெடுப்பு பிரச்சாரத்தை  தொடங்கி வைத்துள்ளார்.
  • மன அழுத்தம், குடும்ப அமைதியின்மை மற்றும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக எந்தவொரு போதைப் பழக்கமும் உருவாகிறது எனவும் அத்தகைய பழக்கத்திலிருந்து இளைஞர்களை வெளி கொண்டு வருவதை நோக்கமாக கொண்டே இந்த முன்னெடுப்பானது தொடங்கப்பட்டுள்ளது என அந்நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் முர்மு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

G20 சுகாதார அமைச்சர்கள் மாநாடானது குஜராத்தில் நடத்த திட்டம்.

  • இந்தியாவின் G-20 தலைமையின் கீழ், G20 நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் மாநாடானது குஜராத்தின் காந்திநகரில் ஆகஸ்ட் 17 அன்று தொடங்குகிறது. 
  • இந்த மாநாட்டின் முதல் நாளில், ஜி 20 துணை அமைச்சர்கள் மாநாடும் அதைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் சுகாதார அமைச்சர்கள் மாநாடும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
  • நுண்ணுயிர் எதிர்ப்பு, சுகாதார அவசரநிலை தடுப்பு, தயார்நிலை மற்றும் ஒரு சுகாதார கட்டமைப்பை உருவாக்குதல் ஆகிய தலைப்புகளை பற்றி விவாதிப்பதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ளதாகும்.

நியமனங்கள்

PFC நிறுவனத்தின் தலைவர் & நிர்வாக இயக்குனராக பர்மிந்தர் சோப்ரா நியமனம்.

  • மத்திய அரசுக்கு சொந்தமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (PFC) நிறுவனமானது, அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் முழுநேர தலைவராக பர்மிந்தர் சோப்ரா அவர்களை ஆகஸ்ட் 14 அன்று நியமித்துள்ளதாக தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • இந்த நியமனம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியமைப்பு சாராத நிதி நிறுவனமான PFCயை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை சோப்ரா பெற்றுள்ளார். மேலும் இவர் இந்த நியமனத்தில் மூலம் தனது சீரிய நடவடிக்கைகளின்படி நிறுவனத்தை மேம்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

AFI அமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  • உலக தடகள அமைப்பின் நிர்வாகக் குழுவில் அடில்லே சுமரிவாலா ஆகஸ்ட் 17 அன்று சக்திவாய்ந்த உலக தடகள நிர்வாகக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் இதற்கு முன் கூடுதல் பொறுப்பில் நான்கு துணைத் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • 65 வயதான இவர், தற்போது 2012 ஆம் ஆண்டு முதல் இந்திய தடகள கூட்டமைப்பின் (AFI) தலைவராக இருந்தவராவார். மேலும் இவர் இந்த பதவியில் “நான்கு ஆண்டுகள்” பதவி வகிப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SBI கார்டின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சக்கரவர்த்தி பதவியேற்றுள்ளார்.

  • ஆகஸ்ட் 12, 2023 முதல் எஸ்பிஐ கார்டு அமைப்பின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக அபிஜித் சக்ரவர்த்தி பொறுப்பேற்றுள்ளார் என்று அந்நிறுவனம் ஆகஸ்ட் 16 அன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இவர் இந்த பொறுப்பை இதற்கு முன் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பதவியிலிருந்த ராம மோகன் ராவ் அமராவிடம் இருந்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சக்ரவர்த்தி வங்கித் துறையில் 34 வருட அனுபவம் கொண்ட இவர் தனது பல்வேறு சீரிய முயற்சிகளின் மூலம் நிறுவனத்தை மேம்படுத்துவார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார செய்திகள்

நடப்பு நிதியாண்டில் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 300 கிளைகளை திறக்க SBI திட்டம்.

  • நடப்பு நிதியாண்டில்(2023-24) இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட புதிய கிளைகளை திறப்பதற்கான முன்னெடுப்பிற்கு பாரத ஸ்டேட் வங்கி ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தனது சமீபத்திய ஆகஸ்ட் 2023 மாத அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. 
  • SBI-க்கு தற்போதுவரை இந்தியா முழுவதும் சுமார் 22 ஆயிரத்து 405 கிளைகளும், 235 வெளிநாட்டு கிளைகள் மற்றும் அலுவலகங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த முன்னெடுப்பின் மூலம் இந்தியாவில் அதிக கிளைகளை உடைய வங்கி என்ற அந்தஸ்தை பெரும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுகள்

கைபேசி செயலி மேலாண்மை நிறுவனமான மொபுலஸ், மதிப்பிற்குரிய “மில்லினியம் ப்ரில்லியன்ஸ் விருதை” வென்றுள்ளது.

  • ஒரு முன்னணி கைபேசி செயலி மேலாண்மை வழங்குனரான மொபுலஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு, அந்நிறுவன வாடிக்கையாளர்களுக்கு சிறந்த, மேம்பட்ட மற்றும் குறைபாடற்ற செயலி மேலாண்மை சேவைகளை வழங்குவதை ஆதரவளிக்கும் வகையில் “2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த கைபேசி செயலி மேலாண்மை நிறுவனம்” என்ற விருதை வென்றுள்ளது.
  • இந்த விருந்தானது மதிப்புமிக்க “மில்லினியம் ப்ரில்லியன்ஸ் விருதுகள் (MBA) ” வழங்கும் நிகழ்ச்சியில் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 61 கிலோ மல்யுத்த பிரிவில் இந்தியாவின் மோகித் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

  • ஜோர்டான் நாட்டில் உள்ள அம்மன் நகரப்பகுதியில் நடைபெற்ற ஆண்களுக்கான 20 வயதுக்குட்பட்டோருக்கான 61 கிலோ மல்யுத்த பிரிவில் இந்திய வீரர் மோகித் குமார் ஆகஸ்ட் 2023 இல் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
  • ஆகஸ்ட் 16 அன்று நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் மோஹித், ரஷ்யாவை சேர்ந்த எல்டார் அக்மதுடினோ என்ற வீரரை 9-8 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து இந்த பட்டத்தை வென்றுள்ளார். மேலும் இதன்மூலம் இப்பட்டதை வென்ற நான்காவது இந்திய மல்யுத்த வீரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பையில் இந்திய வில்வித்தை வீரர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

  • ஆகஸ்ட் 17 அன்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பையின் 4ஆம் கட்டத்தின் ஆடவர் மற்றும் மகளிர் அணி பிரிவுகளில் இந்திய ரிகர்வ் வில்வித்தை வீரர்கள் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • இந்தப் போட்டியில் இந்திய ஆடவர் ரிகர்வ் அணி அதானு தாஸ், தீரஜ் பொம்மதேவரா, துஷார் ஷெல்கே ஆகியோர் ஸ்பெயினின் ஆன்ட்ரஸ் டெமினோ, பாப்லோ அச்சா, யுன் சான்செஸ் ஜோடியை 6-2 (54-56, 57-55, 56-54, 57-55) என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து இந்த வெண்கல பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டனர்.

இரங்கல் செய்திகள்

புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் முன்னாள் DRDO தலைவரான டாக்டர் வி.எஸ். அருணாசலம் காலமானார்.

    • பிரபல விஞ்ஞானியும் முன்னாள் DRDO-தலைவருமான டாக்டர் வி.எஸ்.அருணாசலம் தனது 87வது வயதில் ஆகஸ்ட் 16 அன்று வயது மூப்பின் காரணமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காலமானார்.
    • அருணாசலம் அவர்களின் அறிவு, ஆராய்ச்சி மீதான ஆர்வம் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதில் பெரும் பங்களிப்பு அளித்தது அளப்பெரியது என்றும் இவரது மறைவு அறிவியல் சமூகம் மற்றும் அதன் சார்ந்த மூலோபாய உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படடுத்தியுள்ளது எனவும் இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • மேலும் இவர் மத்திய பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் மற்றும் இவருக்கு 1985 ஆம் ஆண்டும் பத்ம பூஷன் விருதும் 1990 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!