நடப்பு நிகழ்வுகள் – 19 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 19 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 19 ஆகஸ்ட் 2023

நடப்பு நிகழ்வுகள் – 19 ஆகஸ்ட் 2023

தேசிய செய்திகள்

எதிரி நாட்டின் ரேடார்களில் சிக்காத வகையிலான ஐஎன்எஸ் விந்தியகிரி போர்க்கப்பலை இந்திய குடியரசு தலைவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள கிடர்போர் பகுதி-ஹூக்ளி ஆற்றின் கரையில் உள்ள கார்டன் ரீச் கப்பல் காட்டும் தளத்தில் (GRSE) ஆகஸ்ட் 17 அன்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியாவின் புதிய போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விந்தியகிரி’யை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • கர்நாடகாவில் உள்ள மலைத்தொடரின் பெயரால் அழைக்கப்பட்ட இந்த மேம்பட்ட எதிரி நாட்டின் ரேடார்களில் சிக்காத வகையிலான ஐஎன்எஸ் விந்தியகிரி போர்க்கப்பலானது, “புராஜெக்ட் 17ஏ” போர்க் கப்பல்களின் ஆறாவது பதிப்பு கப்பல் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

மத்திய நீர் ஆணையமானது FloodWatch என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • இந்தியா முழுவதும் நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு சூழ்நிலைகளுக்கான தகவல்களை பெறுவதற்காக FloodWatch என்ற கைபேசி பயன்பாடு செயலியானது ஆகஸ்ட் 17 2023 அன்று தொடங்கப்பட்டுள்ளது. 
  • நிகழ்நேர அடிப்படையில் கிட்டத்தட்ட ஏழு நாட்கள் முழுவதும் அனைத்து வெள்ள நிலைமை மற்றும் முன்னறிவிப்புகள் தொடர்பான தகவல்களைப் பரப்புவதை நோக்கமாக கொண்டு இந்த செயலியானது தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் குஷ்விந்தர் புதுடெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியா ஸ்டேக்கைப் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • இந்தியாவும் டிரினிடாட் மற்றும் டொபாகோ அமைப்புகளும் இந்தியா ஸ்டேக்கை பகிர்வது குறித்த ஒரு பகிர்மான மேம்பாட்டு ஒப்பந்தத்தில் (MoU) ஆகஸ்ட் 2023 இல் கையெழுத்திட்டுள்ளன.
  • இது டிஜிட்டல் பொதுப் பொருட்களின் தொகுப்பு, திறந்த API-கள் மற்றும் இது பெரிய அளவில் அடையாளம், கட்டணச் சேவை மற்றும் தரவுகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும்.

மார்கதர்ஷன் திட்டம் 2023-24 ஐ AICTE தலைவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலின்(AICTE) தொலைநோக்கு முன்முயற்சியான , மார்கதர்ஷன் திட்டம் 2023-24 ஐ AICTE தலைவர், பேராசிரியர் T. G. சீதாராம் அவர்களால் ஆகஸ்ட் 16 அன்று வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளதாகும்.
  • அர்ப்பணிப்புள்ள வழிகாட்டுதல் மற்றும் அதன் சீரிய முயற்சிகளை வழங்குவதன் மூலம் நாடு முழுவதும் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு இந்த முன்னெடுப்பானது தொடங்கப்பட்டுள்ளது என AICTE தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநில செய்திகள்

இந்தியாவின் முதல் அதிநவீன 3D அஞ்சல் அலுவலகமானது கர்நாடகாவில் தொடங்கப்பட்டுள்ளது.

  • கர்நாடகாவின் தலைநகரமான பெங்களூருவில் இந்தியாவின் முதல் 3டி அமைப்பில் வடிவமைக்கப்பட்ட புதிய தபால் நிலைய கட்டிடத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகஸ்ட் 18 அன்று தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த புதிய தபால் அலுவலக கட்டிடத்தின் கட்டுமானமானது லார்சன் & டூப்ரோ நிறுவன உதவியுடனும், தொழில்நுட்ப வழிகாட்டுதலை ஐஐடி மெட்ராஸ் உதவியுடனும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இது நகரின் கேம்பிரிட்ஜ்-லேஅவுட்டில் கிட்டத்தட்ட 1,021 சதுர அடியில் கட்டப்பட்ட 3டி அமைப்பாகும்.

முதல் கடல்சார் மாநில மேம்பாட்டு அமைப்பின் மாநாடானது தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

  • மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனோவால், குஜராத்தின் கெவாடியாவில் ஆகஸ்ட் 18 மற்றும் ஆகஸ்ட் 19 ஆகிய தேதிகளில் நாட்டின் “கடல்சார் மாநில மேம்பாட்டு அமைப்பின்(MSDC) 19வது மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார்.
  • நதி மற்றும் கடல்சார் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் அவற்றின் முன்னேற்றம் தொடர்பான குறிப்பிடத்தக்க விடயங்கள் பற்றி விவாதிப்பதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நியமனங்கள்

கோலியர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பாதல் யாக்னிக் நியமனம்.

  • ரியல் எஸ்டேட் துறையின் மிகப்பெரிய ஆலோசனை வழங்குனரான கோலியர்ஸ் நிறுவனமானது, இந்திய பிரிவின்  தலைமை நிர்வாக அதிகாரியாக பாதல் யாக்னிக் என்பவரை நியமித்துள்ளதாக அந்நிறுவனம் ஆகஸ்ட் 17 அன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
  • இந்த நியமனமானது இதற்கு முன்பாக ரமேஷ் நாயர் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாயர் Colliers India நிறுவனத்தின் CEO ஆக ஜூலை 2021 இல் பதவியேற்றுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு ஆலோசகராக முஷால் ஹுசைன் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சிறையில் உள்ள காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான யாசின் மாலிக்கின் மனைவி முஷால் ஹுசைன் மாலிக் என்பவரை, பாகிஸ்தான் நாட்டின் புதிதாக பதவியேற்றுள்ள தற்காலிக பிரதமர் அன்வார்ல் ஹக் கக்கரின் “சிறப்பு ஆலோசகராக” நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் குறிப்பாக பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான துறைக்கான தற்காலிக பிரதமர் கக்கரின் சிறப்பு ஆலோசகராக பதவி வகிப்பார் என அந்நாடு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • டெல்லி திகார் சிறையில் தண்டனை பெற்று வரும் யாசினுக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி புதிய மனுவை, மத்திய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) டெல்லி உயர்நீதிமன்றத்தை சமீபத்தில் அணுகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புத்தக வெளியீடு

“குவி மற்றும் தேசியா” புத்தகங்களை மத்திய அமைச்சர் புவனேஸ்வரில் வெளியிட்டுள்ளார்.

  • மத்திய  திறன் மேம்பாடு மற்றும் கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் ஆகியோர் “குவி மற்றும் தேசியா” புத்தகங்களை ஒடிஷாவின் தலைநகரமான புவனேஸ்வரில் வெளியிட்டுள்ளனர்.
  • தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பானது(NCERT), முதல் முறையாக, ஒடிசா மத்திய பல்கலைக்கழக நிறுவனத்துடன் இணைந்து, “குவி ப்ரைமர்” மற்றும் “தேசியா ப்ரைமர்” ஆகிய இரண்டு இந்த விலைமதிப்பற்ற புத்தகங்களை தயாரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரதான் குறிப்பிட்டுள்ளார்.
  • இந்த இரண்டு புத்தகங்களும் மாநிலத்தின் பழங்குடியின குழந்தைகளின் வலுவான கல்வி, கலாச்சாரத்தின் அடித்தளத்தை வடிவமைப்பதோடு, சமூகத்தின் மொழியியல் பாரம்பரியம் மற்றும் அவற்றின் அடையாளத்தைப் பாதுகாத்து வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விருதுகள்

மதிப்புமிக்க தேசிய புவி அறிவியல் விருதானது டாக்டர் வலியுர் ரஹ்மான் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • சமீபத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர் முர்மு அவர்கள், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் மாணவரான டாக்டர் வலியுர் ரஹ்மான் அவர்களுக்கு இந்த மதிப்புமிக்க தேசிய புவி அறிவியல் விருதை வழங்கியுள்ளார்.
  • இவர் தற்போது இந்திய அரசாங்கத்தின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கடல் மற்றும் துருவத்திற்கான ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் விஞ்ஞானி ஆக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

SJVN நிறுவனத்திற்கு ‘NTPC ராஜ்பாஷா ஷீல்டு 2023’ விருது வழங்கப்பட்டுள்ளது.

  • 2023 ஆம் ஆண்டிற்கான NTPC ராஜ்பாஷா கேடய அமைப்பின் விருதை மத்திய அரசின் மின் பொதுத்துறை நிறுவனமான SJVN ஆனது ஆகஸ்ட் 2023 இல் வென்றுள்ளது. 
  • தேசிய தலைநகரமான புதுதில்லியில் நடைபெற்ற மின்துறை அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழுவின் மாநாட்டில் இந்த விருதுகளானது வழங்கப்பட்டுள்ளது. அலுவல் மொழிக் கொள்கையைப் பரப்புவதற்கும் பெருநிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்திய அரசின் மின்சக்தி அமைச்சகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புகழ்பெற்ற பேராசிரியர் டான் டவ்ஸ்லி 2023 ஆம் ஆண்டிற்கான ஆய்லர் விருதைப் பெற்றுள்ளார்.

  • மேனிங் காலேஜ் ஆஃப் இன்ஃபர்மேஷன் அண்ட் கம்ப்யூட்டர் சயின்சஸ்(CICS) நிறுவனத்தின் புகழ்பெற்ற பேராசிரியரான டான் டவ்ஸ்லி, பழமையான மற்றும் குவாண்டம் தொலைத்தொடர்புகளில் நெட்வொர்க் டோமோகிராஃபிக்கு அவர் அளித்த முக்கிய அடிப்படைப் பங்களிப்புகளுக்காக இந்த ஆண்டிற்கான நெட்வொர்க் சயின்ஸ் சொசைட்டியின் “யூலர் விருதைப்” பெற்றுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நெட்வொர்க் அறிவியல் துறையில், சிறந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக, அதில் குறிப்பாக முன்னுதாரணங்கள் அல்லது ஆய்வு அனுமானங்களை பற்றிய முக்கிய பங்களிப்பிற்காக ஆண்டுதோறும் இந்த ஆய்லர் விருதானது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளையாட்டு செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான U20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் பிரியா மாலிக் தங்கம் வென்றுள்ளார்.

  • ஜோர்டான் நாட்டில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான U20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனையான பிரியா மாலிக் ஆகஸ்ட் 2023 அன்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 
  • இந்த வெற்றியின் மூலம் இந்த U20 உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்தியாவின் இரண்டாவது பெண் என்ற அந்தஸ்தை பெறுகிறார். இதற்கு முன்பாக கடந்த ஆண்டு மல்யுத்தத்தில் இளையோருக்கான உலக பட்டத்தை வென்ற இந்தியாவின் முதல் பெண்மணி ஆண்டிம் பங்கால் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஏர் பிஸ்டல் அணியானது வெண்கலம் வென்றுள்ளது.

  • ஆகஸ்ட் 17 அன்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான ISSF உலக சாம்பியன்ஷிப் தொடரில், சரப்ஜோத் சிங், ஷிவா நர்வால் மற்றும் அர்ஜுன் சிங் சீமா ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணியானது 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளது.
  • இவர்களின் மொத்த மதிப்பெண்ணானது 1,734 உடன், வெள்ளிப் பதக்கத்தை வென்ற ஜெர்மனியை விட ஒன்பது புள்ளிகள் பின்தங்கி இந்த பதக்கத்தை தக்கவைத்து கொண்டுள்ளது. மேலும் இந்த தொடரில் சீனா நாட்டின் அணியானது தங்கப் பதக்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பொருளாதார செய்திகள்

உத்காம் என்ற வலைத்தளத்தை RBI அறிமுகப்படுத்தியுள்ளது.

  • இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்திலும் உரிமை கோரப்படாத டெபாசிட்டுகளுக்கான பணமதிப்பு தேடலை எளிதாக்கும் வகையில், மத்திய ரிசர்வ் வங்கியானது ஒரு மையப்படுத்தப்பட்ட உத்காம் என்ற வலைத்தளத்தை ஆகஸ்ட் 17 2023 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • எந்த ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி ‘உத்கம்’ (உரிமை பெறாத வைப்புத்தொகை – தகவல்களை பெறுவதற்கான நுழைவாயில்) என்ற தளத்தில் பதிவு செய்யலாம் என்றும் இதன் மூலம் அந்த தொகையினை பெறுவதை எளிதாக்கும் நோக்கில் இந்த வலைத்தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் RBI குறிப்பிட்டுள்ளது.

முக்கிய தினம்

உலக மனிதாபிமான தினம் 2023

  • ஈராக் நாட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் பொது சபையின் கிளை-தலைமையகம் மீது தீவிரவாத அமைப்புகள் மூலம் குண்டுவீசித் தாக்கப்பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிப்பிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் நாளானது  உலக மனிதாபிமான தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இந்த தினமானது ஐநாவால் 2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். மேலும் இந்த தினமானது உலகம் முழுவதும் உள்ள மனிதாபிமான உதவிப் பணியாளர்களை(Social Workers) கௌரவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. “It takes a village” என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

உலக புகைப்பட தினம் 2023

  • லென்ஸ் மூலம் தங்களின் உணர்வு உலகத்தைப் பகிர்ந்து கொள்ள மக்களை ஊக்குவிப்பதும் சமூக மற்றும் சமுதாயத்தில் புகைப்படத்தின் தாக்கத்திற்கு மதிப்பளித்தல் மற்றும் பாராட்டுவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் நாளானது உலக புகைப்பட தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • “LANDSCAPES” என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும். மேலும் இந்த தினமானது ஆகஸ்ட் 19, 1839 அன்று பிரெஞ்சு அறிவியல் நிறுவனத்தால் பொதுமக்களுக்கு டாகுரோடைப் செயல்முறையை அறிவித்ததை நினைவு கூறுவதை நோக்கமாக கொண்டு இந்த தினமானது மேற்கொள்ளப்படுகிறது.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!