மாநிலத்தில் அடுத்த வருடம் 17 நாட்கள் அரசு பொது விடுமுறை – பட்டியல் வெளியீடு!

0
மாநிலத்தில் அடுத்த வருடம் 17 நாட்கள் அரசு பொது விடுமுறை - பட்டியல் வெளியீடு!
மாநிலத்தில் அடுத்த வருடம் 17 நாட்கள் அரசு பொது விடுமுறை - பட்டியல் வெளியீடு!
மாநிலத்தில் அடுத்த வருடம் 17 நாட்கள் அரசு பொது விடுமுறை – பட்டியல் வெளியீடு!

2022ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பட்டியலின் படி மொத்தம் 17 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிப்பட்டுள்ளது.

பொது விடுமுறை நாட்கள்:

கர்நாடகா மாநிலத்திற்கான வரும் 2022ம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் முன்னதாக தயாரிக்கப்பட்டது. அதன்படி, விடுமுறை அறிவிக்க மாநில அமைச்சரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், கர்நாடக அமைச்சரவை 2022ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 17 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இரண்டாவது சனி, நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற விடுமுறை தினங்களாகும்.

தமிழகத்தில் யோகா, இயற்கை மருத்துவம், பிஎன்ஒய்எஸ் மருத்துவ படிப்பு – கால அவகாசம் நீட்டிப்பு!

விடுமுறைப் பட்டியலில் மே தினம் (மே 1, 2022), பக்ரீத் (ஜூலை 10, 2022), மஹாளய அமாவாசை (செப்டம்பர் 25, 2022), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2, 2022), மகரிஷி வால்மீகி ஜெயந்தி/ஈத் மிலாத் (அக்டோபர்) ஆகிய நாட்களுக்கு பொது விடுமுறை அளிக்கவில்லை. இதுதவிர, கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25, 2022) பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. இதனால் இந்த நாளையும் விடுமுறையாக தனியாக அறிவிக்கவில்லை. மேலும், குடகு மாவட்டத்தில், செப்டம்பர் 3, 2022 அன்று கைல் முஹுருத், அக்டோபர் 18, 2022 அன்று துலா சங்கரமணம் மற்றும் டிசம்பர் 8, 2022 இல் ஹுத்ரி பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 இல் விடுமுறை நாட்களின் பட்டியல்:
  • ஜனவரி 15, 2022 – சனிக்கிழமை – உத்தராயண புண்யகாலம் / மகர சங்கராந்தி
  • ஜனவரி 26, 2022 – புதன் – குடியரசு தினம்
  • மார்ச் 1, 2022 – செவ்வாய் – மகா சிவராத்திரி
  • ஏப்ரல் 1, 2022 – வெள்ளி – ஆண்டுதோறும் வங்கிக் கணக்குகள் மூடப்படும்
  • ஏப்ரல் 2, 2022 – சனிக்கிழமை – உகாதி
  • ஏப்ரல் 14, 2022 – வியாழன் – அம்பேத்கர் ஜெயந்தி / மகாவீர ஜெயந்தி
  • ஏப்ரல் 15, 2022 – வெள்ளி – புனித வெள்ளி
  • மே 3, 2022 – செவ்வாய் – பசவ ஜெயந்தி / அக்ஷய திரிதியா, குதுப்-இ-ரம்ஜான்
  • ஆகஸ்ட் 9, 2022 – செவ்வாய் – மொகரத்தின் கடைசி நாள்
  • ஆகஸ்ட் 15, 2022 – திங்கள் – சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 31, 2022 – புதன் – வரசித்தி விநாயக விரதம்
  • அக்டோபர் 4, 2022 – செவ்வாய் – மகாநவமி, ஆயுத பூஜை
  • அக்டோபர் 5, 2022 – புதன் – விஜயதசமி
  • அக்டோபர் 24, 2022 – திங்கட்கிழமை – நரக சதுர்தசி
  • அக்டோபர் 26, 2022 – புதன் – பலிபாட்யமி / தீபாவளி
  • நவம்பர் 1, 2022 – செவ்வாய் – கன்னட ராஜ்யோத்சவா
  • நவம்பர் 11, 2022 – வெள்ளி – கனகதாச ஜெயந்தி

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!