DRDO நிறுவனத்தில் 150 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு! முழு விபரம் இதோ!

0
DRDO நிறுவனத்தில் 150 காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு! முழு விபரம் இதோ!
DRDO நிறுவனத்தில் 150 காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு! முழு விபரம் இதோ!
DRDO நிறுவனத்தில் 150 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு! முழு விபரம் இதோ!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு எதிரொலியாக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இப்போது சீரான நிலை நிலவி வருவதால், மீண்டும் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த வகையில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முழு விபரம்:

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ (DRDO) ஆனது, ரிசர்ச் சென்டர் ( RCI) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜனவரி 24, திங்கட்கிழமை அன்று வெளியாகியது. இந்த ஆட்சேர்ப்பில் 150 அப்ரண்டிஸ் பணியிடங்கள் உள்ளன.

காலிப்பணியிடங்கள்: மொத்தம் உள்ள 150 பணியிடங்களில் 40 இடங்கள் கிராஜூவேட் லெவல் அப்ரண்டிஸ், 60 இடங்கள் டெக்னீசியன் அப்ரண்டிஸ், 50 இடங்கள் டிரேட் அப்ரண்டிஸ்களுக்கானது ஆகும்.

விண்ணப்பதாரர் வயது வரம்பு: டிஆர்டிஓ பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் ஜனவரி 1, 2022 அன்று 18 வயதுக்கு மேல் இருந்தால் மேற்க்குறிப்பிட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆர்சிஐ-யின் (RCI) அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: பிப்ரவரி 7, 2022.

விண்ணப்பதாரர் தகுதி:

1. கிராஜூவேட் லெவல் அப்ரண்டிஸ்: இந்த விண்ணப்பதாரர்கள் [இசிஇ, இஇஇ, சிஎஸ்இ, மெக்கானிக்கல், கெமிக்கல்] ஆகியவற்றில் பி.இ / பி.டெக் அல்லது பி.காம் / பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
2. டெக்னீசியன் அப்ரண்டிஸ்: டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இசிஇ, இஇஇ, சிஎஸ்இ, மெக்கானிக்கல் அல்லது கெமிக்கல் ஆகியவற்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
3. டிரேட் அப்ரண்டிஸ்: இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் மற்றும் வெல்டர்] ஆகிய பாடங்களில் (NCVT / SCVT உடனான) ஐடிஐ-யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி /எழுத்துத் தேர்வு / நேர்காணல் ஆகும்.

* முதலில் https://rcilab.in என்கிற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
* பின்பு ஹோம் பேஜிற்கு வந்ததும், ‘என்கேஜ்மென்ட் ஆஃப் அப்ரண்டிஸ் 2021-22′ (Engagement of Apprentices – 2021-22) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
* இப்போது ஒரு தனி பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படும், அங்கு போர்ட்டலில் பதிவு செய்யும்படி கேட்கப்படும்.
* என்ஏபிஎஸ் (NAPS) போர்ட்டலில் உங்கள் ரிஜிஸ்டர் நம்பரை உள்ளிட்டு பின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு பதிவு செய்ய வேண்டும்,
* இப்போது பதிவு செய்து முடித்ததும், முந்தைய பக்கத்திற்குச் சென்று, ‘அப்ளை ஹியர்’ (Apply Here) என்பதைக் கிளிக் செய்யவும்.

* இந்நிலையில் விண்ணப்பத்தை அணுக உங்கள் ரிஜிஸ்டர் எண் மற்றும் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.
*பின்பு விண்ணப்பப் படிவத்தை அடைந்தவுடன், தேவையான அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்ப வேண்டும்.
* விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தவுடன், அதைச் சமர்ப்பிக்கவும். இதன் பிறகு, அப்ளிகேஷனை பிரிண்ட் அவுட் எடுக்க ஸ்க்ரீனின் இடது பக்கத்தில் ஒரு விருப்பத்தைக் காண்பிக்கும், எதிர்கால தேவைக்கு விண்ணப்பத்தின் டிஜிட்டல் நகலை பிரிண்ட் செய்து அல்லது சேமித்து வைக்க இதை பயன்படுத்தலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!