2024ல் 12 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!!
2024 ஆம் ஆண்டில் ரேஷன் கடைகளுக்கு எந்தெந்த பொது விடுமுறை என்கிற பட்டியலை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
ரேஷன் கடை:
தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் இரண்டு வார வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை தினங்களில் விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது 2024 ஆம் ஆண்டில் ரேஷன் கடைகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்கிற பட்டியலை தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்த மாநிலங்கள் – பட்டியல் விவரங்கள்!
தற்போது அரசு வெளியிட்டுள்ள ரேஷன் கடைகளுக்கான விடுமுறை பட்டியலை காணலாம்.
- ஜனவரி 15 (திங்கட்கிழமை) – பொங்கல் பண்டிகை
- ஜனவரி 25 (வியாழக்கிழமை) – தைப்பூசம்
- ஜனவரி 26 (வெள்ளிக்கிழமை) – குடியரசு தினம்
- ஏப்ரல் 11 (வியாழக்கிழமை) – ரம்ஜான்
- ஏப்ரல் 14 (ஞாயிற்றுக்கிழமை) – தமிழ் புத்தாண்டு/டாக்டர் பிஆர் அம்பேத்கர் பிறந்த தினம்
- மே 1 (புதன்கிழமை) – மே தினம்
- ஆகஸ்ட் 15 (வியாழக்கிழமை) – சுதந்திர தினம்
- செப்டம்பர் 7 (சனிக்கிழமை) – விநாயகர் சதுர்த்தி
- அக்டோபர் 2 (புதன் கிழமை) – காந்தி ஜெயந்தி
- அக்டோபர் 12 (சனிக்கிழமை) – விஜயதசமி
- அக்டோபர் 31 (வியாழக்கிழமை) – தீபாவளி
- டிசம்பர் 25 (புதன்கிழமை) – கிறிஸ்துமஸ்
என மொத்தமாக 12 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.