TNPSC தேர்வில் Polity கஷ்டமா இருக்கா? – இது உங்களுக்கு யூஸ் ஆகும் !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தேர்வில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. எனவே தேர்வர்களுக்கு பயன் தரும் வகையில் முந்தைய ஆண்டு வினாக்களின் தொகுப்பு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1. எந்த அரசியல் சட்டவிதிப்படி மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் குடியரசத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்?
(A) அரசியல் சட்ட விதி 42
(B) சட்ட விதி 76
(C) சட்ட விதி 44
(D) சட்ட விதி 153
விடை : (B)
2. இந்திய ஜனாதிபதியை தேர்தெடுக்கும் அமைப்பு
(A) பாராளுமன்றம்
(B) நீதித்துறை
(C) தேர்வர் குழு
(D) சட்டமன்றம்
விடை : (C)
3. அகில இந்திய பணிகளின் தந்தை என்று அதிகார பூர்வமாக அழைக்கப்படுபவர் யார்?
(A) மெக்காலே பிரபு
(Β) காரன்வாலிஸ் பிரபு
(C) பி.ஆர்.அம்பேத்கார்
(D) சர்தார் வல்லபாய் படேல்
விடை : (D)
4. இராஜ்ய சபாவில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ————- ஒரு முறை ஓய்வு பெறுகின்றனர்.
(A) ஒரு ஆண்டிற்கு
(B) இரண்டு ஆண்டுகளுக்கு
(C) மூன்று ஆண்டுகளுக்கு
(D) நான்கு ஆண்டுகளுக்கு
விடை : (B)
5. மாநிலங்கள் அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
(A) 220
(B) 230
(C) 250
(D) 200
விடை : (C)