நின்றுவிடும் யமுனா திருமணம், சக்தி எடுக்க போகும் அதிரடி முடிவு – “மீனாட்சி பொண்ணுங்க” சீரியல் இன்றைய எபிசோட்!

0
நின்றுவிடும் யமுனா திருமணம், சக்தி எடுக்க போகும் அதிரடி முடிவு -
நின்றுவிடும் யமுனா திருமணம், சக்தி எடுக்க போகும் அதிரடி முடிவு - "மீனாட்சி பொண்ணுங்க" சீரியல் இன்றைய எபிசோட்!
நின்றுவிடும் யமுனா திருமணம், சக்தி எடுக்க போகும் அதிரடி முடிவு – “மீனாட்சி பொண்ணுங்க” சீரியல் இன்றைய எபிசோட்!

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “மீனாட்சி பொண்ணுங்க” சீரியல் இதில் இன்றைய எபிசோடில் வரும் ட்விஸ்ட் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனாட்சி பொண்ணுங்க:

சின்னத்திரையில் பல டாப் சேனல்களுடன் போட்டி போட்டு ஜீ தமிழ் சேனலில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் சேனல் TRPயில் டாப் இடத்தில் இருக்கும் சீரியல் தான் “மீனாட்சி பொண்ணுங்க” சீரியல். இந்த சீரியலில், யமுனாவின் கல்யாணம் பாதியிலேயே நின்று விடுகிறது. ஆனால் இது பற்றி தெரியாமல் பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு பத்திரத்தை வெற்றி ரங்கநாயகியிடம் ஒப்படைக்கிறார். பின் கல்யாண மண்டபத்திற்கு சென்று பார்க்கிறார். மேலும் யமுனாவின் கல்யாணத்தை எப்படியாவது கோகிலாவிடம் பேசி நடத்திவிட வேண்டும்என சக்தி நினைத்து வேகமாக வருகிறார்.

நீண்ட கால விடுப்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் – பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு!

ஆனால் ஏற்கனவே கல்யாணம் நின்று போய் யமுனா மற்றும் மீனாட்சி அழுது கொண்டிருக்கிறார்கள். அதனால் சக்தியால் எதுவும் செய்ய முடியவில்லை. மேலும் நடந்தது எல்லாத்துக்கும் சக்தி தான் காரணம் என மீனாட்சி சக்தியை திட்ட, அந்த நேரம் பார்த்து வெற்றி மண்டபத்திற்கு வருகிறார். வெற்றி தான் கல்யாணம் நின்றதற்கு காரணம் என நினைத்து சக்தி வெற்றியை திட்டுகிறார். அடுத்ததாக எல்லாரும் வீட்டிற்குள் வர ஆனால் சக்தி பத்திரம் எப்படி மாறியது என கண்டுபிடிக்காமல் நான் வீட்டிற்குள் வரமாட்டேன் என சொல்கிறார்

அதன் பின் அனைவரும் வற்புறுத்தி சக்தியை வீட்டிற்குள் அழைத்து செல்ல, சரண்யா அவளுக்கு சாப்பாடு கொடுக்கிறார். இது வெற்றி சம்பாரித்த சாப்பாடு தான் என பூஜா கிண்டல் செய்ய, உடனே சக்திக்கு மயக்கம் வருகிறது. அதன் பின் வெற்றி மற்றும் சரண்யா அவளுக்கு முதலுதவி செய்கிறார். மறுபக்கம் கல்யாணம் நின்றதை நினைத்து மீனாட்சி வீட்டில் அனைவரும் சோகமாக இருக்க , அவர்களுக்கு சாந்தா ஆறுதல் சொல்கிறார். பின் கல்யாணம் நின்றதால் யமுனா வருத்தத்தில் இருப்பார் என நினைத்துக் கொண்டிருக்க ஆனால் அவர் எதுவும் நடக்காதது போல பாத்திரம் கழுவுகிறார். பின் யமுனா எல்லோருக்கும் ஆறுதல் சொல்ல மீனாட்சி யமுனாவை அழைத்துச் சென்று சாமி படத்தின் முன் நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறாள். அதன் பின் சக்திக்கு வெற்றி பணிவிடை செய்ய, பூஜா தான் பத்திரத்தை மாற்றி இருப்பாள் என சரண்யா சொல்கிறார். இதெல்லாம் இன்றைய எபிசோடில் வர இருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!