மீண்டும் செயலிழந்த வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் செயலிகள் – உலகம் முழுவதும் பாதிப்பு!

0

உலகம் முழுவதும் நேற்று இரவு வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளின் பயன்பாடு முடக்கப்பட்டது. இது குறித்து பல்வேறு புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் செயலிழந்த செயலிகள்:

இக்கால கட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பொழுது போக்குக்காக மற்றும் அரட்டை அடிக்க வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளையே பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள். இவ்விரு செயலிகளும் மெட்டாவுக்கு சொந்தமான செயலிகள். இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் செயலிகள் கடந்த சில நாட்களுக்கு முன் சுமார் 2 மணி நேரம் எவ்வித செயல்படுமின்றி முடக்கப்பட்டது. இதைப் போலவே நேற்று இரவு 11.45 மணி அளவில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளின் காரணமாக உலகம் முழுவதும் சிறிது நேரம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் தனது செயல்பாட்டை இழந்து முடக்கப்பட்டன.

TNPSC தேர்வுக்கு குறைந்த செலவில் வீட்டில் இருந்தே படிக்கலாம் – முழு விவரம் உள்ளே!

பிறகு உடனே தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டதால் இவ்விரு செயலிகளும் தனது இயல்பு நிலைக்கு திரும்பின. இதன் காரணமாக நேற்று இரவு பயனர்கள் செயலியை திறக்க முயற்சிக்கும் போது தற்போது சேவை கிடைக்கவில்லை என்று காட்டியது. எனவே வாட்ஸ்அப் செயலி முடக்கப்பட்டதாக அமெரிக்காவில் 12,000 நபர்களும், இங்கிலாந்தில் 46,000 நபர்களும், பிரேசிலில் 42,000-க்கு மேற்பட்ட நபர்களும், இந்தியாவில் 20,000-க்கு மேற்பட்ட நபர்களும் புகார் அளித்துள்ளார்கள். மேலும் இன்ஸ்டகிராம் செயலி முடக்கப்பட்டதாக அமெரிக்காவில் 4,800 நபர்களும் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!