SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை அறிவிப்பு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - எச்சரிக்கை அறிவிப்பு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - எச்சரிக்கை அறிவிப்பு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை அறிவிப்பு!

தற்போது நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை பதிவுகளை வெளியிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி:

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. காலத்திற்கேற்ப திருட்டுகளும் நவீனமாயமாகியுள்ளது. அதனை கட்டுப்படுத்த அவ்வப்போது காவலர்கள் பல்வேறு விழிப்புணர்வு பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மூன்று பாதுகாப்பு குறிப்புகள் வெளியிட்டுள்ளது. இது குறித்து உங்கள் நிதி கணக்குகளை பாதுகாப்பதன் வழியாக போலி எஸ் எம் எஸ்-ஐ தவிருங்கள். பாதுகாப்பான வங்கி நடைமுறைகளைப் பின்பற்றி மோசடி செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை முதல் கல்லூரிகள் & பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!

மேலும் மோசடி செய்பவர்களிடமிருந்து உங்கள் நிதி கணக்குகளை பாதுகாப்பதற்காக தெரியாத லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் OTP ஐ பகிர வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஃபிஷிங் இணைப்பு மோசடிகள் அதிகரிப்பு குறித்து எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, இந்த இணைப்புகளை உங்கள் இன்பாக்ஸில் பெறுகிறீர்களா? தெளிவாக இருங்கள்! இந்த ஃபிஷிங் இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவல்களை இழக்க நேரிடும். எச்சரிக்கையாக இருங்கள். கிளிக் செய்வதற்கு முன் சிந்தியுங்கள்! என குறிப்பிட்டுள்ளது.

Wipro நிறுவனத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு – ஐடி நிபுணர்களுக்கு புதிய திட்டம்!

அதே போல் நேஷனல் வங்கியில் இருந்து உங்களுக்கு இலவச பரிசு கிடைத்திருக்கிறது என்று பல போலியான தகவல்கள் மூலம் ஃபிஷிங் இணைப்புகள் இயங்கி வருகிறது. எனவே உங்கள் ப்ரௌசிங் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், சில குக்கீகள் அங்கீகரிக்கப்படாத, பாதுகாப்பற்ற வலைத்தளங்களில் இருந்து உங்கள் தனியுரிமைக்கு தீங்கு விளைவிக்கும். எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் SBI உடன் பாதுகாப்பாக இருங்கள் என SBI எச்சரிக்கை விடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!