சதம் அடிக்க திணறும் ‘ரன் மெஷின்’ கோலி – 50 இன்னிங்ஸ்களாக தொடரும் எதிர்பார்ப்பு!

0
சதம் அடிக்க திணறும் 'ரன் மெஷின்' கோலி - 50 இன்னிங்ஸ்களாக தொடரும் எதிர்பார்ப்பு!
சதம் அடிக்க திணறும் 'ரன் மெஷின்' கோலி - 50 இன்னிங்ஸ்களாக தொடரும் எதிர்பார்ப்பு!
சதம் அடிக்க திணறும் ‘ரன் மெஷின்’ கோலி – 50 இன்னிங்ஸ்களாக தொடரும் எதிர்பார்ப்பு!

கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் ஒரு சதத்தை கூட பதிவு செய்யாத இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் விராட் கோலி மீது தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த நிலை கிட்டத்தட்ட 50 இன்னிங்ஸ்களாக தொடருவது குறிப்பிடத்தக்கது.

கோலியின் பேட்டிங் தரம்

இந்திய கிரிக்கெட் அணியை தற்போது வழிநடத்தி செல்லும் பொறுப்பை வகித்து வரும் கேப்டன் விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளாக, அதாவது சுமார் 50 இன்னிங்ஸ்களாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் உலகின் ரன் மெஷின் என்று அழைக்கப்படக்கூடிய கோலி கடந்த சில ஆட்டங்களில் மோசமான பேட்டிங் தரத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மிகவும் மோசமாக சொதப்பி வருகிறார் கோலி.

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுவாக ஒரு கிரிக்கெட் அணியில் ஏற்படும் எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அணியின் கேப்டனை சுற்றி விமர்சனங்கள் எழுவது வழக்கமானது. ஆனால் கோலியை சுற்றி எப்போதுமே எதிர்மறையான விமர்சனங்கள் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. இதனுடன் களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக இருக்கும் கோலி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களும், ஒருநாள் போட்டியில் 43 சதங்களும் பெற்றுள்ளார். ஆனால் 2 ஆண்டுகளாக தனது மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் கோலி லார்ட்ஸ் டெஸ்டில் இதுவரை வெறும் 42 ரன்கள் மட்டுமே பெற்றுள்ளார்.

குறிப்பாக இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆன்டர்ஸனிடம் 7 ஆவது முறையாக வீழ்ந்துள்ளார். இது போன்ற சூழலை கோலி இதுவரை 2 முறை எதிர்கொண்டுள்ளார். அதாவது 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற்ற 24 இன்னிங்ஸ்களில் இவர் சதத்தை தொடவில்லை. அதே போல 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் வரை 25 இன்னிங்ஸ்களிலும் இவர் சதமடிக்கவில்லை. கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 2 சதங்கள் அடித்திருந்தார்.

இதனுடன் விராட் கோலியின் டெஸ்ட் போட்டி புள்ளி விவரங்களை காண்கையில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2 சதங்கள், 2 அரை சதங்கள் உட்பட 612 ரன்கள் எடுத்திருந்தார். அதுவே 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டியில் ஒரு அரை சதத்துடன் 116 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற 6 டெஸ்ட் போட்டிகளில் 2 அரை சதத்துடன் 229 ரன்கள் மட்டுமே பெற்றுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

சுருங்க கூறின், கடந்த 2018 ஆம் ஆண்டில் 1000 ரன்களை கடந்திருந்த கோலி, அடுத்த 3 ஆண்டுகளை சேர்த்து மொத்தமாக 1000 ரன்களை கூட தொடவில்லை. விராட் கோலியின் இந்த பேட்டிங் தரத்தை பார்க்கும் போது, ரன் மெஷின் பழுதடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதே நேரத்தில் கோலியின் இந்த நிலை மேலும் தொடர்ந்தால் அவரது கேப்டன் பதவிக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!