கந்துவட்டிக்காரனை விரட்டிய முத்து, சந்திராவிற்கு வந்த பிரச்சனை – “சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், கந்துவட்டிக்காரன் வீட்டிற்கு வந்து சண்டை போட உடனே முத்து அவர்களை அடித்து விரட்டுகிறார். மறுபக்கம் மனோஜிற்கு விஜயா சாப்பாடு கொண்டு செல்கிறார். பின் முத்துவை மீனா வீட்டின் அருகில் இருப்பவர் கிண்டல் செய்ய உடனே அவரை அடித்து முத்து பிரச்சனை செய்கிறார்.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், மீனா வீட்டிற்கு கந்துவட்டிக்காரன் வந்து பிரச்சனை செய்ய சந்திரா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். உடனே முத்து இனிமேல் வந்து இவர்களை தொல்லை செய்யக் கூடாது என சொல்லி அடித்து விரட்டுகிறார். மறுபக்கம் மனோஜிற்கு விஜயா போன் செய்து பேச, அவர் சாப்பிட கூட காசு இல்லை என சொல்கிறார். அதனால் விஜயா வருத்தப்பட, அவர் கணவருக்கு தெரியாமல் மனோஜிற்கு உதவி செய்கிறார். இதற்கிடையே முத்துவிற்கு சந்திரா தங்க செயின் வாங்கி கொடுக்கிறார்.
முத்து எனக்கு இதெல்லாம் பிடிக்காது என சொல்ல, ஆனால் சந்திரா கட்டாயப்படுத்தி கொடுக்கிறார். இந்நிலையில் மனோஜிற்கு விஜயா சமைத்துவிட்டு பையில் எடுத்துக் கொண்டு கிளம்பி செல்கிறார். மறுபக்கம் மீனா வீட்டின் அருகே இருப்பவர் முத்துவை அவமானப்படுத்துவது போல பேசுகிறார். அந்த மாப்பிள்ளை அழகாக இருந்ததாக சொல்ல, முத்துவிற்கு பயங்கர கோவம் வருகிறது. அதனால் பெரியவர் என பார்க்காமல் அவர்களை முத்து பயங்கரமாக அடிக்கிறார். அப்போது தடுக்க வந்த ஒருவரை முத்து அடித்துவிட அதை பார்த்து சந்திரா அதிர்ச்சி அடைகிறார். முத்துவிற்கு பயங்கரமாக கோவம் வர மீனா அவரை தடுத்து நிறுத்துவது எல்லாம் இன்றைய எபிசோடில் வர இருக்கிறது.
Exams Daily Mobile App Download