விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் மணிமேகலைக்கு நடந்த விபரீதம் – நடுவர் செய்த காரியம்!
விஜய் டிவி “குக் வித் கோமாளி” மிகவும் புகழ்பெற்ற நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் அதில் சென்ற வார எபிசோடில் மணிமேகலை முகத்தில் நடுவர் வெங்கடேஷ் பாலை வீசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி:
தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் மாறுபட்ட கான்செப்ட் உடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் மூன்றாவது சீசன் சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அதில் கடந்த இரண்டு சீசன்களில் கலந்து கொண்ட கோமாளிகள் சிலர் மீண்டும் பங்கேற்று இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் மணிமேகலை.
மார்ச் 7ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – தேர்தல் எதிரொலி!
அவர் சன் மியூசிக் விஜேவாக பிரபலமானவர். காதல் திருமணம் செய்ததால் வருமானத்திற்காக விஜய் டிவி பக்கம் வந்த அவர் Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவர் ஹுசைன் உடன் கலந்து கொண்டார். அதன் பின் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். அதன் பின் குக் வித் கோமாளி சீசன் 2வில் அவருக்கு கோமாளியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் செய்த லூட்டிகளை பார்த்த ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுத்தனர்.
பின் மூன்றாம் சீசனிலும் அவர் கலந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் வாரந்தோறும் மாறுபட்ட கெட்டப்பில் அவர் வர, இந்த வாரம் பேரழகன் படத்தில் சூர்யா போல கெட்டப் போட்டு இருந்தார். மேலும் பாலை வைத்து டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட, வெங்கட் மணிமேகலை வருவது தெரியாமல் பாலை தூக்கி எறிகிறார். அதனால் பால் அவர் மீது பட்டு அவர் கீழே விழுகிறார். இந்த காட்சிகள் எபிசோட் நடக்கும் போது நல்ல காமெடியாக இருந்தது.