Home Entertainment சமையல் பற்றி குறை கூறிய ரசிகருக்கு செஃப் வெங்கடேஷ் பட் அளித்த பதில் – வைரலாகும் பதிவு!

சமையல் பற்றி குறை கூறிய ரசிகருக்கு செஃப் வெங்கடேஷ் பட் அளித்த பதில் – வைரலாகும் பதிவு!

0
சமையல் பற்றி குறை கூறிய ரசிகருக்கு செஃப் வெங்கடேஷ் பட் அளித்த பதில் – வைரலாகும் பதிவு!
சமையல் பற்றி குறை கூறிய ரசிகருக்கு செஃப் வெங்கடேஷ் பட் அளித்த பதில் - வைரலாகும் பதிவு!
சமையல் பற்றி குறை கூறிய ரசிகருக்கு செஃப் வெங்கடேஷ் பட் அளித்த பதில் – வைரலாகும் பதிவு!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் செஃப் வெங்கடேஷ் பட்டின் சமையல் பற்றி ரசிகர் ஒருவர் தெரிவித்த விமர்சனத்துக்கு, பட் கொடுத்துள்ள விளக்கம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செஃப் வெங்கடேஷ் பட்

தற்போது 3வது சீசனுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் ‘குக் வித் கோமாளி’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக கலந்து கொண்டு வருபவர் செஃப் வெங்கடேஷ் பட். மிகப்பெரிய சமையல் கலை நிபுணரான செஃப் வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் பல்வேறு சமையல் நிகழ்ச்சிகளில் ஜட்ஜ் ஆக கலந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டுமாக ‘குக் வித் கோமாளி’ சீசன் 1 மூலம் மீண்டும் ஜட்ஜ் ஆக களமிறங்கி இருக்கும் செஃப் வெங்கடேஷ் பட் தற்போது 3வது சீசனிலும் இடம்பிடித்திருக்கிறார்.

தமிழகத்தில் பிப்.1 முதல் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் – அரசு அறிவிப்பு!

குறிப்பாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் குக் ஆகட்டும் , கோமாளிகள் ஆகட்டும் சமையலில் ஒரு கண் வைத்திருந்தாலும் ஆங்காங்கே நகைச்சுவையை தெறிக்க விட்டு ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம். அதே போல ‘குக் வித் கோமாளி’ ஷோவில் கலந்து கொண்டு வரும் ஜட்ஜ் செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோரும் இதற்கு விதிவிலக்கல்ல. இவர்களும் தாங்கள் ஒரு ஜட்ஜ் என்பதை மறந்து அவ்வப்போது கோமாளிகளுடன் இணைந்து ஆடிப்பாடுவது, அவர்கள் சமையலை கெடுப்பது என பல வேலைகளை செய்வார்கள்.

இது பார்ப்பதற்கு ஃபன் ஆக இருக்கும். இப்போது ‘குக் வித் கோமாளி’ ஷோவில் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆன ஜட்ஜ் என்றால் அது செஃப் வெங்கடேஷ் பட் தான். இவரிடம் இருந்து எளிமையாக நல்ல கமெண்டுகளை பெற்று விட முடியாது. அந்த அளவுக்கு இவருக்கு சமையல் ஞானம் அதிகம். இப்படி இருக்க, செஃப் வெங்கடேஷ் பட் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு குக்கிங் வீடியோ ஒன்றை பதிவிட, அதை கண்ட ரசிகர் ஒருவர், ‘சமையலில் நெய் இவ்வளவு தேவையா. இவரது சமையல் நன்றாக இருக்கிறது. ஆனால் எல்லா பொருட்களையும் அதிகமாக சேர்ப்பது போல தெரிகிறது. ஹெல்த் ரொம்ப முக்கியம் சார்.

மாநிலம் முழுவதும் பிப்.3 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு பிறப்பிப்பு!

நீங்கள் சமையலில் சேர்க்கும் பொருளை வைத்து 3 நாட்கள் சமையல் செய்யலாம்’ என்று விமர்சித்துள்ளார். இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள செஃப் வெங்கடேஷ் பட், ‘உங்களுக்கு வேண்டும் என்றால் நெய் ஊத்துங்கள். வேண்டாம் என்றால் விட்டு விடுங்கள். நான் உங்களை வற்புறுத்தினேனா. இது எனக்கு தெரிஞ்ச சமையல்’ என கூறி இருக்கிறார். ஆனால் இந்த பேச்சு வளர்ந்து கொண்டே போக, ஒரு கட்டத்தில் ‘பதில் சொன்னால் தலைக்கணம் என்று சொல்வீர்கள். இது போல தான் சமையல் நான் கற்றுக்கொண்டேன். அதை தான் செய்கிறேன்’ என்று கூறி இருக்கிறார். இந்த பதிவுகள் தற்போது வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2022

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here