தனியார் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு !!! – 600 பட்டதாரிகளுக்கு வேலை வழங்க திட்டம் !

0
தனியார் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு !!! - 600 பட்டதாரிகளுக்கு வேலை வழங்க திட்டம் !
தனியார் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு !!! - 600 பட்டதாரிகளுக்கு வேலை வழங்க திட்டம் !

தனியார் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு !!! – 600 பட்டதாரிகளுக்கு வேலை வழங்க திட்டம் !

பல்வேறு வகையான இயற்கை வளங்களை சார்ந்து வாணிபம் செய்யும் சுரங்க தொழில் நிறுவனமான வேதாந்தா நிறுவனம் தற்போது ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் 600 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பினை வழங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு !

நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை என்பது பல காலமாக இருந்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் இதற்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. மத்திய/ மாநில அரசுகளும் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தி வருகிறது.

TN Police “FB  Group” Join Now

படித்தும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் இதே நிலைதான் நீடித்து வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்தது. அதன் காரணமாக பலரும் தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். இதனால் வேலையில்லா திண்டாட்டத்தின் நிலை அதிதீவிரமாக உள்ளது.

வேதாந்தா அதிரடி !

தற்போது நாட்டின் இயற்கை வளங்களை சார்ந்து வாணிபம் செய்யும் தனியார் சுரங்க தொழில் நிறுவனமான வேதாந்தா நிறுவனம் 500 முதல் 600 பட்டதாரிகளுக்கு வேலை வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளது. கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக அவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த கேம்பஸ் இன்டர்வியூ ஆன்லைன் முலமாக நடத்தப்பட உள்ளது.

அந்நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி மது ஸ்ரீவாஸ்தவா ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில், புதிதாக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 1 வருட கால பயிற்சிக்கு உட்படுத்தப்படுவர் என்றும், அதன் பின் அவர்களிடம் வெளிப்படும் திறன்களை பொறுத்து அதற்கேற்ற துறைகளில் பணியமர்த்தப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிதி திட்டமிடுதல், தர மற்றும் தயாரிப்பு கட்டுப்பட்டு உள்ளிட்டவற்றில் தொடங்கி சுரங்க மேலாண்மை வரை பல்வேறு துறைகள் அந்நிறுவனத்தில் செயல்படுகின்றன.

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here