மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – மருத்துவர்களுக்கான சூப்பர் ஜாக்பாட்!!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 16 துறைக்கான மருத்துவர்களை நியமனம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை:
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த பின்னர் 2018-ம் ஆண்டில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து மருத்துவமனை கட்டுவதற்கான வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும், 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ADMIN வேலைக்கு பணியாளர்கள் தேவை – சூப்பர் வாய்ப்பு!உடனே விண்ணப்பியுங்கள்!
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 16 துறைக்கான மருத்துவர்களை நியமனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மருத்துவர்கள் நவம்பர் 27ம் தேதி முதல் டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும், 16 துறைக்கான நேர்முக தேர்வு டிசம்பர் 13ம் தேதி நடைபெற இருக்கிறது.