UPSC IFS 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – முதன்மை தேர்வு தேதி வெளியீடு!

0
UPSC IFS 2023 தேர்வர்களின் கவனத்திற்கு - முதன்மை தேர்வு தேதி வெளியீடு!
UPSC IFS 2023 தேர்வர்களின் கவனத்திற்கு - முதன்மை தேர்வு தேதி வெளியீடு!
UPSC IFS 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – முதன்மை தேர்வு தேதி வெளியீடு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது இந்திய வனத்துறையில் காலியாக உள்ள Officers பதவிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான UPSC IFS 2023 முதன்மை தேர்வுக்கான கால அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழுமையான தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

UPSC IFS 2023 Main Exam:

இந்திய வனத்துறையில் ஏற்பட்டு வரும் Officers பதவிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் UPSC ஆணையத்தால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் UPSC IFS தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வகையில் 2023ம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 150 காலியிடங்களுக்கான அறிவிப்பானது 01.02.2023 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்களும் பெறப்பட்டது. இத்தேர்வின் முதற்கட்டமான முதல்நிலை தேர்வானது 28.05.2023 அன்று நடத்தப்பட்டு முடிவுகளுக்கும் வெளியிடப்பட்டது.

NHIPMPL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.75,000/-

இதனை தொடர்ந்து இத்தேர்வின் அடுத்த கட்டமான முதன்மை தேர்வுக்கான கால அட்டவணை ஆனது இன்று (31.10.2023) UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வானது வருகின்ற நவம்பர் மாதம் 26ம் தேதி தொடங்கப்பட்டு டிசம்பர் மாதம் 03ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இத்தேர்வானது காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை எனவும், மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை எனவும் 02 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. தேர்வர்கள் இந்த தேர்வுக்கான அட்டவணையை கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!