பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய ‘பாக்கியலட்சுமி’ சீரியல் – TRP ரேட்டிங் வெளியீடு!
விஜய் டிவியில் தினசரி ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் அதிகபட்ச பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து 45வது வாரத்திற்கான TRP ரேட்டிங்கில் முதன்மை இடத்தை பிடித்துள்ளது ‘பாக்கியலட்சுமி’ சீரியல். இதில் எப்போதும் முதல் இடத்தை பிடித்து வரும் ‘பாரதி கண்ணம்மா’ 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
TRP ரேட்டிங்
பொதுவாக டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்பதை அதன் TRP ரேட்டிங்கை வைத்து கணித்து விடலாம். அதாவது ஒரு சீரியலை எவ்வளவு பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள் என்பதை பொறுத்து இந்த TRP ரேட்டிங் கணக்கிடப்படும். அந்த வகையில் பெரும்பாலும் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டும் தான் TRP ரேட்டிங்கில் முதன்மையான இடங்களை பிடித்து வருகிறது.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதாவின் வீட்டிற்கு புது வரவு – ரசிகர்கள் வாழ்த்து!
இப்போது டிவி சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பப்படும் சீரியல்களின் TRP ரேட்டிங் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் அதிகப்படியான சமயங்களில் முதல் இடத்தை பிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் 10.5 புள்ளிகளுடன் தற்போது 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் 11.1 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் எப்போதும் போல 10.7 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த சீரியலை தொர்டந்து,
- ராஜா ராணி 2 – 9.5
- தமிழும் சரஸ்வதியும் – 7.7
- மௌனராகம் 2 – 6
- நாம் இருவர் நமக்கு இருவர் – 5.3
- பிக்பாஸ் சீசன் 5 – 5.1
- தென்றல் வந்து என்னைத் தொடும் – 3.9
- காற்றுக்கென்ன வேலி – 3.7
- நம்ம வீட்டு பொண்ணு – 3.4
- தேன்மொழி BA – 3
- வேலைக்காரன் – 2.9
- பாவம் கணேசன் – 2.6
- ராஜபார்வை – 2.4