தமிழகத்தில் இன்றைய தங்கத்தின் விலை குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை:
தமிழகத்தில் தங்கத்தை ஆபரணமாக மட்டும் அல்லாமல் முதலீடாகவும் பலர் கருதி வருகின்றனர். எனவே தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,315 க்கும், சவரனுக்கு ரூ.58,520/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை அடுத்து, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,705/-க்கும், சவரனுக்கு ரூ.53,640/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
TNPSC Group 4 2024 Maths Question and Answer 03
தற்போது 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17/- குறைந்து ரூ.7,298/-க்கும், சவரனுக்கு ரூ.136/- குறைந்து ரூ.58,384/- க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 6,690க்கும், சவரன் ரூ.53,520/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.95.60/-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி ரூ.95.60/- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.