Home news தமிழகத்தில் ஆரம்பமாகும் கோடை வெயில் – அதிகரிக்கும் வெப்பநிலை.. இன்றைய வானிலை அறிக்கை!

தமிழகத்தில் ஆரம்பமாகும் கோடை வெயில் – அதிகரிக்கும் வெப்பநிலை.. இன்றைய வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் ஆரம்பமாகும் கோடை வெயில் – அதிகரிக்கும் வெப்பநிலை.. இன்றைய வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ஆரம்பமாகும் கோடை வெயில் - அதிகரிக்கும் வெப்பநிலை.. இன்றைய வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ஆரம்பமாகும் கோடை வெயில் – அதிகரிக்கும் வெப்பநிலை.. இன்றைய வானிலை அறிக்கை!

தமிழகத்தில் பிப்ரவரி 22ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வானிலை தகவல்:

தமிழகத்தில் நிலவி வந்த குளிர் தற்போது படிப்படியாக குறைந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. நாம் இப்பொது கோடை காலத்தின் ஆரம்ப நிலையில் இருக்கிறோம். இதனையடுத்து பிப்ரவரி நடுப்பகுதிலேயே வெப்பநிலை காலை நேரங்களிலேயே சற்று அதிகரித்து காணப்படுகிறது.

தமிழகத்தில் ஓலா நிறுவனம் எடுத்த புதிய முயற்சி – அதிகரிக்கும் வேலைவாய்ப்பு!

மேலும் மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பிப். 18 மற்றும் 19, 20, 21, 22 ம் தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அதிகாலை நேரங்களில் மட்டும் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளதாகவும் மற்ற நேரங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெப்பநிலை குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்க கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here