நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ் – சவரனுக்கு ரூ.680/- குறைவு!
தமிழகத்தில் இன்றைய தங்கத்தின் விலை குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை:
தமிழகத்தில் தங்கத்தை ஆபரணமாக மட்டும் அல்லாமல் முதலீடாகவும் பலர் கருதி வருகின்றனர். எனவே தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,397க்கும், சவரனுக்கு ரூ.59,176/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை அடுத்து, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6,780/-க்கும், சவரனுக்கு ரூ.54,240/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
Follow our Instagram for more Latest Updates
தற்போது 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.93/- குறைந்து ரூ.7,304/-க்கும், சவரனுக்கு ரூ.744/- குறைந்து ரூ.59,432/- க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85/- குறைந்து ரூ. 6,695/-க்கும், சவரன் ரூ.53,560/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.98.50/-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.2 குறைந்து ரூ.96.50/- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.