தமிழக காவல்துறை கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2024 – தேர்வு பாடங்கள்!!

0
தமிழக காவல்துறை கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2024 - தேர்வு பாடங்கள்!!
தமிழக காவல்துறை கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2024 – தேர்வு பாடங்கள்!!

தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் முலமாக தமிழக காவல்துறையில் உள்ள கான்ஸ்டபிள் பதவிகள் நிரப்பப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இருப்பினும் தேர்வர்கள் தற்போது முதலே படிக்கத் துவங்கி விட்டனர். ஆனால் தேர்வு மாதிரி அறிந்து என்னென்னெ தலைப்புகளில் படிக்க வேண்டும் என்பதை தெரிந்திருந்தால் தான் எளிதாக படிக்க முடியும். எனவே தேர்வர்கள் படங்களை தேடி அலையாமல் இருக்க படிக்க வேண்டிய அனைத்து பாடப்பிரிவுகளை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

TNUSRB PC Exam Pattern:
  • பகுதி I – தமிழ் மொழி திறன் தேர்வு
  • பகுதி II – முதன்மை எழுத்துத் தேர்வு
TNUSRB PC Exam Syllabus:

பகுதி – I

இலக்கணம்

எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொது இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம், மொழித்திறன், பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல். எதிர்ச்சொல்லை எழுதுதல், பொருந்தாச்சொல்லை கண்டறிதல், பிழைத் திருத்தம், ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல் மற்றும் இது சம்மந்தப்பட்ட தலைப்புகள்

இலக்கியம்

திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம். எட்டுத்தொகை. பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள். அறநூல்கள், பக்தி இலக்கியங்கள். சிற்றிலக்கியங்கள். நாட்டுப்புற இலக்கியங்கள், புதுக்கவிதை மொழிப்பெயர்ப்பு நூல்கள் ஆகியவை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள், தொடரை நிரப்புதல் மற்றும் இது சம்மந்தப்பட்ட தலைப்புகள்

தமிழ் அறிஞர்களும் & தொண்டுகளும்

தமிழ்த்தொண்டும் தமிழ் அறிஞர்கள். தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு தமிழ் உரைநடை, தமிழ்த்தொண்டு, சமுதாயத் தொண்டு தொடர்பான செய்திகள் மேற்கோள்கள் மற்றும் இது சம்மந்தப்பட்ட தலைப்புகள்

பகுதி – II

முதன்மை எழுத்துத் தேர்வு :

பொது அறிவியல்

  • இயற்பியல்
  • வேதியியல் உயிரியல்
  • சூழ்நிலையியல்
  • உணவு & ஊட்டச்சத்தியல்

சமூக அறிவியல்

  • வரலாறு
  • புவியியல்
  • இந்திய அரசியல்
  • பொருளாதாரம்

பொது அறிவு & நடப்பு நிகழ்வுகள்:

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் சமீபகால வளர்ச்சி, இந்தியாவில் அரசியல் வளர்ச்சி. இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் கலை & கலாச்சாரம், விளையாட்டுகள் & தடகள் விளையாட்டுகள், தேசிய & சர்வதேச விருதுகள், தேசிய & பன்னாட்டு அமைப்புகள். பெயர் சுருக்கங்கள். யார். யார், புத்தகங்கள் & ஆசிரியர்கள், இந்தியா & அதன் அண்டை நாடுகள் மற்றும் இன்றைய கால இந்தியா.

உளவியல் (Psychology)

எண் பகுப்பாய்வு (Numerical Analysis):

எண்ணியல் திறன் தொடர்பாக பதில் அளித்தல் பற்றி சோதிக்கப்படும்.

தருக்க பகுப்பாய்பு (Logical Analysis):

கொடுக்கப்பட்ட கேள்வியில் உள்ள தகவலின் பல்வேறு பரிணாமங்களை கண்டறிய தருக்க ரீதியாக பகுப்பாய்வு செய்தல்.

அறிவாற்றல் திறன் (Mental Ability):

இந்த சோதனையானது, தூண்டல் அல்லது விலக்கு பகுத்தறிவு மூலம் முடிவுகளை எப்படி எடுக்கப்படுகிறது என்ற விண்ணப்பதாரர்களின் திறன் சோதிக்கப்படும்.

தகவல்களை கையாளும் திறன் (Information Handling Skills):

கொடுக்கப்பட்ட தகவலுக்கு. அந்த தகவலின் பல்வேறு அம்சங்கள். அனுமானங்கள் மற்றும் இணைக்கப்பட்ட உண்மைகள் பற்றி சோதிக்கப்படும்.

TNUSRB PC Syllabus PDF 2024 – Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!