TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – Polity பாடத்தில் நல்ல மார்க் வேணும்னா இதையும் தெரிஞ்சுக்கோங்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1, 2 ,4 என பல்வேறு தேர்வுகள் மூலம் அதன் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முறையான பயிற்சி என்பது மிகவும் முக்கியம். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் Polity பாடத்தில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்வி கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.இது தேர்வர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. இந்தியாவில் பாராளுமன்ற இடது கொள்கை குறிப்பிடுவது ———-. இது காலனித்துவத்திற்கு பிந்தைய சமூக பொருளாதார மற்றும் அரசியல் வடிவமைப்பின் சித்தாந்தம்
(A) திருத்தல்வாதம்
(B) ஜனநாயகம்
(C) மார்க்சியம்
(D) சமதர்மம்
(E) விடை தெரியவில்லை
விடை : (A)
2. ராஜஸ்தானில் பஞ்சாயத்து ராஜ் நிறுவிய முதல் மாவட்டம்
(A) கோடா
(B) ஜலாவார்
(C) மதோபூர்
(D) நாகவர்
(E) விடை தெரியவில்லை
விடை : (D)
3. பதினைந்தாவது நிதிக்குழுவின் தலைவர் யார்?
(A) K.சந்தானம்
(B) P.V ராஜமன்னார்
(C) C. ரங்கராஜன்
(D) Ν.Κ. சிங்
(E) விடை தெரியவில்லை
விடை : (D)
4. ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிப்பவர்
(A) குடியரசுத் தலைவர்
(B) தலைமைத் தேர்தல் ஆணையர்
(C) முதலமைச்சர்
(D) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
விடை : (A)
5. அரசாங்கத்தின் மூன்றாவது மற்றும் முக்கியமான அங்கமாகக் கருதப்படுவது எது?
(A) சட்டமன்றம்
(B) செயலாட்சிக் குழு
(C) நீதித்துறை
(D) செய்தி மற்றும் விளம்பரத்துறை
விடை : (C)