TNPSC போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா?… முக்கிய தகவல் வெளியீடு!
அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் எங்கள் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNPSC தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.
ஆன்லைன் மாதிரி தேர்வு
தமிழகத்தில் அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் அரசு பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகள் நடைபெறுகிறது. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசின் துறைகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக அரசு போட்டி தேர்வுகள் நடைபெறவில்லை. இப்போது இந்த அறிவிப்பு போட்டி தேர்வர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது TNPSC தேர்வில் இடம்பெற்றுள்ள இந்திய ஆட்சியியல் பாட பகுதிக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.