TNPSC தேர்வில் கணித பாடத்தில் பாஸ் ஆகணுமா? அதிக மார்க் பெற இது முக்கியம்!

0
TNPSC Group 4 2024 Maths Question and Answer 04

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு அனைத்து பாடங்களிலும் தனி கவனம் செலுத்துவது முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக கணிதத்தில் பெறப்படும் மதிப்பெண்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, ட்ரிக்னாமெட்ரி போன்ற பாடங்களின் மூலக்கூறுகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தேர்வர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

1) ரூ. 414-க்கு விற்கப்படும் ஒரு மேசையின் லாபம் 15% எனில் அதன் வாங்கிய விலை என்ன?

(A) ரூ. 400

(B) ரூ. 314

(C) ரூ. 326

(D) ரூ. 360

விடை – D

2) ஒரு நாற்காலியின் விலை ரூபாய் 2100 யிலிருந்து ரூபாய் 2520 ஆக அதிகரித்துள்ளது எனில் அதிகரித்த விலை சதவீதத்தைக் காண்க.

(A) 15%

(B) 20%

(C) 10%

(D) 25%

விடை – B

3) ஒரு எண்ணின் 300% ஆனது 120 எனில், அவ்வெண்ணின் 60% காண்க.

(A) 12

(B) 24

(C) 36

(D) 48

விடை – B

4) அசல் ரூ. 5,000 க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளுக்கு தனி வட்டி என்ன?

(A) 3500

(B) 5000

(C) 2500

(D) 2000

விடை : (C)

5) ₹1,000க்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்கு தனி வட்டி

(A) ₹ 1,000

(B) ₹ 200

(C) ₹100

(D) ₹2,000

விடை : (B)

Follow our Instagram for more Latest Updates

சென்னையில் ரூ.75,000/- மாத ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!