TNPSC தேர்வில் கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமா? அப்போ இதை மிஸ் பண்ணாதீங்க!
TNPSC ஆணையத்தின் கீழ் குரூப் 1,2,3 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடத்துவதன் மூலம் அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்த போட்டி தேர்வுகளில் கணிதத்தில் பெறப்படும் மதிப்பெண்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, ட்ரிக்னாமெட்ரி போன்ற பாடங்களின் மூலக்கூறுகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் கணிதத்தில் முந்தைய ஆண்டு வினாக்களின் தொகுப்பு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1) ஒருவர் ₹ 10,000 ஐ ஆண்டுக்கு 9% தனிவட்டி வீதத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் அவருக்கு கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு?
(A) 12,500
(B) 11,800
(C) 12,700
(D) 12,000
விடை : (C)
2) A-யின் உயரமானது B-யின் உயரத்தில் 25% குறைவாக உள்ளது எனில் B-யின் உயரம் A-யின் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?
(A) 50%
(B) 45%
(C) 22 1/3%
(D) 33 1/3%
விடை – D
3)ஆல்கஹால் 20% உள்ள 5 லிட்டர் திரவ கலவையோடு 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. புதிய கலவையில் ஆல்கஹால் எத்தனை சதவீதம் உள்ளது?
(A) 16 2/3%
(C) 20%
(B) 15%
(D) 16%
விடை – A
4) A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
(A) 10 நாட்கள்
(B) 12 நாட்கள்
(C) 11 நாட்கள்
(D) 20 நாட்கள்
விடை – B
5) ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 50,000. அவர்களில் 40% ஆண்கள், 35% பெண்கள், மீதம் உள்ள குழந்தைகள், எனில் அந்த கிராமத்தில் குழந்தைகளின் எண்ணிக்கையைக் காண்க
(A) 12,000
(B) 12,500
(C) 17,500
(D) 13,500
விடை – B