TNPSC குரூப் 4 VAO தேர்வு கல்வித்தகுதி, வயது வரம்பு & பணிகள் – முழு விபரம் இதோ!

5
TNPSC குரூப் 4 VAO தேர்வு கல்வித்தகுதி, வயது வரம்பு & பணிகள் - முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வு கல்வித்தகுதி, வயது வரம்பு & பணிகள் - முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வு கல்வித்தகுதி, வயது வரம்பு & பணிகள் – முழு விபரம் இதோ!

தமிழகத்தின் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 4 விஏஓ தேர்விற்கான பாடத்திட்டம், கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு பற்றிய முக்கிய விவரங்களை இப்பதிவில் காணலாம்.

போட்டித்தேர்வுகள் :

தமிழகத்தில் அரசு சார்பில் பல்வேறு துறைகள் இயங்கி வருகிறது. இத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழகத்தின் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

Current Account தொடங்க இருக்கும் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – RBI புதிய விதிகள்!

இதன் காரணமாக அரசு பணிக்கான தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு பணிக்கான தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குரூப் 4 விஏஓ தேர்வு பற்றிய அனைத்து விவரங்களையும் தற்போது காணலாம்.

பதவிகள்:
  • இளநிலை உதவியாளர் (Junior Assistant)
  • தட்டச்சர் (Typist)
  • சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
  • கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer)
  • வரித் தண்டலர் (Bill Collector)
  • நில அளவர் (Field Surveyor)
  • வரைவாளர் (Draftsman)
கல்வித்தகுதி
  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களால் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும் /அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றவர்களால் தட்டச்சர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும் / அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் சுருக்கெழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
  • மேலும் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் தேர்ச்சி பெற்றவர்கள் அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். எனவே அவர்களுக்கு கூடுதலான வாய்ப்பு உள்ளது.
வயது வரம்பு:

கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உள்ளது. இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து பதவிகளுக்கும் பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை. இதனாலேயே இந்த தேர்விற்கு அதிக எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

தேர்வு முறை:

எழுத்து தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தற்போது தமிழக அரசு, தமிழ் பாடத் தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்துள்ளது. இதனால் பாடத்திட்டம் முறை குறித்து மாற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

பாடத்திட்டம்:

100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி தேர்வு வினாக்களும் கேட்கப்படும். குரூப் 4 தேர்வில் பெரும்பாலும் வினாக்கள் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களில் கேட்கப்படும். ஒரு சில நேரங்களில் 11 மற்றும் 12ம் வகுப்பு படங்களில் இருந்தும் கேட்கப்படும்.

Join Our TNPSC Coaching Center

தேர்வர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் படித்தாலே போதுமானது. அரசு வெளியிடும் பாடத்திட்டத்தினை சோதித்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மூலம் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

கட் -ஆஃப்:

மொத்தம் உள்ள 300 மதிப்பெண்களில் 90 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால் அதிக போட்டிகள் இருப்பதால் தேர்வர்கள் அதிகபட்ச மதிப்பெண்களை பெறும் போது மட்டுமே பணிக்கான வாய்ப்புகளை பெறுகின்றனர். மேலும், இடஒதுக்கீடு வகையில் குறிப்பிட்ட பிரிவினருக்கான மதிப்பெண்கள் கட் -ஆஃப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!