தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 2 தேர்வின் மூலம் காலியாக உள்ள 2327 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | Group 2 |
பணியிடங்கள் | 2327 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.07.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TNPSC காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி குரூப் 2 தேர்வின் மூலம் Municipal Commissioner, Assistant Section Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 2327 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Group 2 கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18,20,22 மற்றும் 26 என்றும் அதிகபட்ச வயதானது 30 மற்றும் 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை ICF நிறுவனத்தில் 1000+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
Group 2 ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் Pay Level 8,10,11,16,18 மற்றும் 19 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும்.
TNPSC விண்ணப்பக்கட்டணம்:
- One-time registration – Rs. 150/-
- For Preliminary Examination – Rs.100/-
- For Main Written Examination – Rs.150/-
Group 2 தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் Preliminary exam, Main written exam மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.