TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 – 118 காலிப்பணியிடங்கள்!!

0
TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 – 118 காலிப்பணியிடங்கள்!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைத் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Manager Grade – III, Senior Officer, Assistant Manager உட்பட பல பதவிகளுக்கு 100க்கு மேற்பட்ட பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Combined Technical Services Examination
பணியிடங்கள் 118
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைத் துறையில் Manager Grade – III, Senior Officer, Assistant Manager உட்பட பல பதவிகளுக்கு மொத்தமாக 118 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் 01.07.2024 தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

TNPSC கல்வித்தகுதி:

  • பணிக்கு தொடர்புடைய துறைகளிலோ அல்லது துறை சார்ந்த பாடங்களிலோ Degree/ Master’s Degree/ Institute of Chartered Accountants / Cost Accountants/ CA/ ICWA/ MBA/ BE/ Post Graduate Degree என இதில் ஏதேனும் ஒரு தேச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதனுடன் பணியில் முன் அனுபவமிருக்க வேண்டியது அவசியம்.

TNPSC பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும் பாகம் 13

தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு செயல்முறை :

  • பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.
  • தமிழ் தகுதித்தேர்வு, பொது அறிவு மற்றும் கணிதத் திறன் ஆகியவை சார்ந்து எழுத்துத் தேரயில் கேள்விகள் கேட்கப்படும்.
  • இந்த தேர்வுகள் வரும் 28.07.2024 அன்று நடைபெறவுள்ளது.

TNPSC CTSE கட்டண விவரம்:

  • பதிவு கட்டணம் – ரூ.150/-
  • தேர்வு கட்டணம் – ரூ.200/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.05.2024 அன்று முதல் வரும் 14.06.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download TNPSC Notification PDF 2024

Apply Online

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!