TNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு!

0

தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவிப்பொறியாளர் பணி (Assistant Engineer) விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் (TNEB Assistant Engineer Recruitment) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த ஜனவரி 8 ஆம் தேதி வெளியானது. அதன்படி, மின்னியல் பிரிவில் 400 காலியிடங்களும், இயந்திரவியல் பிரிவில் 125 காலியிடங்களும், கட்டவியல் பிரிவில் 75 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.

இப்பதவிக்குரிய ஆன்லைன் விண்ணப்பமானது ஜனவரி 24 ஆம் தேதி தொடங்கி, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 24 என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், TNEB Assistant Engineer Recruitment 2020 பணிக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி மார்ச் 16 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கு மார்ச் 19 ஆம் தேதி வரையில் அவகாம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இப்பணியிடங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் கடைசி தேதி வரையில் காத்திருக்காமல், உடனே விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Last Date Extended Notification 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!