தமிழக அஞ்சல் துறையில் 2994 GDS காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியே போதும் || சம்பளம்: ரூ.29,380/-

0
தமிழக அஞ்சல் துறையில் 2994 GDS காலிப்பணியிடங்கள் - 10 ஆம் வகுப்பு தேர்ச்சியே போதும் || சம்பளம்: ரூ.29,380/-
தமிழக அஞ்சல் துறையில் 2994 GDS காலிப்பணியிடங்கள் - 10 ஆம் வகுப்பு தேர்ச்சியே போதும் || சம்பளம்: ரூ.29,380/-
தமிழக அஞ்சல் துறையில் 2994 GDS காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியே போதும் || சம்பளம்: ரூ.29,380/-

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள Gramin Dak Sevaks (GDS) [Branch Postmaster (BPM)/Assistant Branch Postmaster (ABPM)/Dak Sevaks] பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 2994 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து 03.08.2023 முதல் 23.08.2023 வரை ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழக அஞ்சல் துறை
பணியின் பெயர் Gramin Dak Sevaks (GDS)
பணியிடங்கள் 2994
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.08.2023
விண்ணப்பிக்கும் முறை Online
அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:
  • UR – 1406 பணியிடங்கள்
  • OBC – 689 பணியிடங்கள்
  • SC – 492 பணியிடங்கள்
  • ST – 20 பணியிடங்கள்
  • EWS – 280 பணியிடங்கள்
  • PWDA – 22 பணியிடங்கள்
  • PWDB – 38 பணியிடங்கள்
  • PWDC – 31 பணியிடங்கள்
  • PWDDE – 16 பணியிடங்கள்

என மொத்தம் 2994 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Gramin Dak Sevaks (GDS) கல்வி தகுதி:
  • இந்திய அரசு/மாநில அரசுகள்/ இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் (கட்டாய அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களாகப் படித்து) தேர்ச்சி பெற்ற 10ஆம் வகுப்புக்கான இடைநிலைப் பள்ளித் தேர்வு தேர்ச்சிச் சான்றிதழ் கட்டாயக் கல்வியாக வைத்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் உள்ளூர் மொழியைப் படித்திருக்க வேண்டும், அதாவது (தமிழ்) குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு வரை [கட்டாய அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களாக] படித்திருக்க வேண்டும்.
இதர தகுதிகள்:-

(i) கணினி அறிவு
(ii) சைக்கிள் ஓட்டுதல் பற்றிய அறிவு

வயது வரம்பு:

23.08.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

GDS சம்பள விவரம்:
  • BPM – ரூ.12,000/- முதல் ரூ.29,380/-
  • ABPM/DakSevak – ரூ.10,000/- முதல் ரூ..24470/-
  • Gramin Dak Sevaks (GDS) தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

GDS விண்ணப்ப கட்டணம்:
  • GEN/OBC/EWS – ரூ.100/-
  • SC/ST/PWD/Ex-servicemen – விண்ணப்ப கட்டணம் கிடையாது

TANUVAS பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு-  நேர்காணல் மட்டுமே!

தமிழக அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் தமிழ்நாடு அஞ்சல் அலுவலக இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://indiapostgdsonline.gov.in/ என்ற இணைப்பின் மூலம் 03.08.2023 முதல் 23.08.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!