தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் பாடங்கள் மாற்றம் – மாணவர்கள் கவனத்திற்கு!!
தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் அரசு, தனியார் மற்றும் தன்னாட்சி பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் பாடங்கள், தேர்வு போன்ற அனைத்து பணிகளுக்கும் TN DTE தான் வரையறைகளை வழங்குகிறது.
தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானத் தொடர்ந்து இக்கல்லூரிகளில் அட்மிஷனுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் TN DTE தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் பாடத்திட்டத்தை மாற்றி உள்ளது. முன்னதாக முதலாம் ஆண்டிற்கான புதிய பாடங்கள் வெளியான நிலையில், தற்போது 2 மற்றும் 3ம் ஆண்டுகளுக்கான பாடங்களும் மாற்றப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 புவியியல் 2024 – முக்கியமான கேள்விகள் என்னென்ன தெரியுமா??
இப்புதிய பாடத்திட்டத்திற்கான வரைவுத்திட்டத்தை https://dte.tn.gov.in/ என்ற இனைய போர்டல் மூலம் அறிந்துக் கொள்ளலாம். வரும் கல்வியாண்டு இந்த புதிய பாடத்திட்டத்தின் படி செயல்படும் என்று கருதப்படுகிறது.