
துருக்கி மற்றும் சிரியாவில் திடீர் நிலநடுக்கம் – பரிதமாக உயிரிழந்த மக்கள்… தமிழக முதல்வர் இரங்கல்!
துருக்கி மற்றும் சிரியாவில் நாட்டில் நேற்று பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து பேசிய தமிழக முதல்வர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம் என்று கூறியுள்ளார்.
நிலநடுக்கம்:
துருக்கி நாட்டில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் பிற கட்டிடங்கள் இடிந்து விழுந்து. அந்த இடத்தில் இருந்த மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கி பலத்த காயத்திற்கும் ஆளாகியுள்ளனர். பலரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேசிய விருது பெற்ற மல்லி திரைப்படம் – பிப். 13 பள்ளிகளில் திரையிட திட்டம்!
Follow our Instagram for more Latest Updates
நேற்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். துருக்கியை போலவே சிரியாவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்த மக்களுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் துருக்கி, சிரியா நிலநடுக்கம் குறித்து பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த பேரிடரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.