TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – செப்.24 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் - செப்.24 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் - செப்.24 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – செப்.24 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் நடத்தும் அக்டோபர் மாதத்திற்கான ஆப் கேம்பஸ் வேலை வாய்ப்புகளுக்கான அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 24 வரை வரவேற்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புகள்

பொதுவாக IT துறைகளில் வேலை பார்க்கும் அல்லது படித்து முடித்த இளைஞர்களுக்கு பெரிய IT நிறுவனங்களில் வேலை கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அதிலும் குறிப்பாக இந்தியாவின் முன்னணி IT தொழில்நுட்ப நிறுவனங்களாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் வேலைக்காக பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் காத்து கிடக்கின்றனர்.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – டெபிட் கார்டு மூலம் கடன் உதவி!

இவர்களது ஆர்வத்தை தணிக்கும் விதமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் ஒரு புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிலும் TCS நிறுவனம் ஆப் கேம்பஸ் மூலம் இந்த புதிய பணியமர்த்தலை ஏற்படுத்த இருக்கிறது. இது தொடர்பாக TCS வெளியிட்டுள்ள அறிவிப்பின் கீழ், B.E, B.Tech, M.E, M.Tech, MCA அல்லது M.Sc பட்டப்படிப்புகளை 2021-22 ஆம் ஆண்டுக்குள் படித்து முடித்துள்ள புதிய மாணவர்களை நிறுவனம் எதிர்பார்க்கிறது.

அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு தேர்வுகளில் குறைந்தபட்சமாக 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இது தவிர, விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் இரண்டு வருடங்கள் வரை பணி அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களும் TCS ஆப் கேம்பஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நிலைகள்:

TCS நிறுவனத்தில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் புதிய பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த எழுத்துத் தேர்வு அக்டோபர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் நேர்காணல் குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதில் எழுத்துத் தேர்வு அறிவாற்றல் திறன் மற்றும் நிரலாக்க திறன் உள்ளிட்ட இரண்டு பகுதிகளை கொண்டிருக்கும். இந்த தேர்ர்வுகளின் நேர காலம் முறையே 120 மற்றும் 180 நிமிடங்கள் ஆகும். எழுத்துத் தேர்வின் முடிவுகள் TCS iON மூலம் அறிவிக்கப்படும்.

விண்ணப்ப முறை:

  • மேலே குறிப்பிட்ட தகுதிகளையுடைய விண்ணப்பதாரர்கள் https://www.tcs.com/careers/tcs-off-campus-hiring என்ற TCS இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • அதற்கு முன், அவர்கள் IT பிரிவின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
  • இதற்கான கட்டணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
  • விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 24 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் TCS நிறுவனத்தின் 18002093111 என்ற ஹெல்ப் லைன் எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!