TCS iON வழங்கும் 15 நாட்கள் இலவச பயிற்சி – IT பிரெஷ்ஷர்களின் கவனத்திற்கு! முழு விபரம் இதோ!

0
TCS iON வழங்கும் 15 நாட்கள் இலவச பயிற்சி - IT பிரெஷ்ஷர்களின் கவனத்திற்கு! முழு விபரம் இதோ!
TCS iON வழங்கும் 15 நாட்கள் இலவச பயிற்சி - IT பிரெஷ்ஷர்களின் கவனத்திற்கு! முழு விபரம் இதோ!
TCS iON வழங்கும் 15 நாட்கள் இலவச பயிற்சி – IT பிரெஷ்ஷர்களின் கவனத்திற்கு! முழு விபரம் இதோ!

டிசிஎஸ் ஐடி பிரெஷ்ஷர்களுக்கு 2 வார பயிற்சி அளிக்க உள்ளது. இந்த பயிற்சியில் IT பிரெஷ்ஷர்கள் பலவற்றை கற்றுக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

IT பயிற்சி:

இந்தியாவில் ஐடி துறையில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனமாக கருதப்படுவது டிசிஎஸ். இந்த நிறுவனத்தில் பணியில் சேருவது பலரது கனவாக இருந்து வருகிறது. தற்போது நிறுவனமானது TCS iON மூலம் CAREER EDGE-YOUNG PROFESSIONAL என்ற பயிற்சியினை வழங்கி வருகிறது. இந்த பயிற்சியானது 15 நாட்களுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சியினால் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கம் – மாநில முதல்வர் அறிவிப்பு!

பிரெஷ்ஷர்களுக்கு வழங்கப்படும் இந்த 15 நாள் பயிற்சியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் கலந்து கொள்ள முடியும். பிரெஷ்ஷர்கள் தங்களது திறனை மேம்படுத்திக்கொள்ள இது உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. விண்ணப்பதாரர்களுக்கு கம்யூனிகேஷன், வணிக யுக்திகள், நிதி மற்றும் டிஜிட்டல் திறன் போன்றவற்றில் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும் என நிறுவனத்தின் சார்பில் கூறப்படுகிறது.

மத்திய அரசு சார்பில் ஆண்டுக்கு ரூ.36,000 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த பயிற்சியானது iON மூலம் வழங்கப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை https://www.tcsion.com/dotcom/TCSSMB/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த பயிற்சியானது 2 வாரங்களுக்கு வழங்கப்படும். இதில் மாணவர்கள் கட்டாயமாக குறைந்தபட்சம் 7 – 10 மணி நேரம் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முக்கிய தொகுதியும் 1 – 2 மணி நேரத்தில் முடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் அலுவலக சூழல், தகவல் தொடர்பு திறன், கணக்கியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படைகள், செயற்கை நுண்ணறிவு போன்ற பலவற்றை கற்றுக் கொள்ள முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!