தமிழகத்தில் கிடு கிடுவென குறைந்த தங்கம் விலை.. இவ்வளவு கம்மியா – இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் தங்கம் விலை நேற்று மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று (மே 12) தங்கம் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் இன்றைய நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
தங்கம் விலை
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த வாரம் உச்சம் தொட்ட நிலையில் இந்த வாரம் சற்று குறைந்துள்ளது. நேற்று (மே 11) தங்கம் விலை எந்தவித மாற்றமும் இன்றி கிராம் ரூ.5742க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.37 குறைந்து 5,705 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சவரன் ரூ.296 குறைந்து ரூ.45,640ஆக விற்பனை செய்யப்படுகிறது
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 37 குறைதீர்ப்பாளர்கள் நியமனம் – அரசு அறிவிப்பு!
அதே போல 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 குறைந்து 4,673 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ. 37,384க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு 4.30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் இன்றே விரைந்து தங்கம் வாங்கலாம்
Exams Daily Mobile App Download