தமிழகத்தில் மே 16 முதல் ஆவின் பால் விலை குறைப்பு – முதல்வர் அறிவிப்பு!!
தமிழக முதல்வராக இன்று பதவி ஏற்றுக் கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
ஆவின் பால் விலை குறைப்பு
கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் அமோகமாக வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைத்துள்ளது. இனி அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு முக ஸ்டாலின் அவர்களது தலைமையிலான ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறும். திமுக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரணம் – முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!
குறிப்பாக, மக்களுக்கு பிடித்த வகையில் பல கவர்ச்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இன்று தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட ஸ்டாலின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். அதே போல் பல அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது, ஆவின் பால் விலை குறைப்பு.
இந்த பொது முடக்கத்தின் போது மக்கள் மிகவும் அதிகமாக பாதிப்படைந்தது, ஆவின் பால் உயர்வின் காரணமாக தான் என்று சொல்ல வேண்டும். தற்போது ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வரும் மே மாதம் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆவினில் 1 லிட்டர் பால் 47 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரும் மே 16 ஆம் தேதி முதல் ஒரு லிட்டர் 44 ரூபாய்க்கு விற்கப்படும். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்