தமிழகத்தில் அனைத்து வாகனங்களுக்கும் வரி உயர்வு – சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்!

0

தமிழகத்தில் அனைத்து வாகனங்களுக்கும் வரி உயர்வு – சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்!

தமிழகத்தில் மோட்டார் சைக்கிள், கார்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் வரியை உயர்த்தி சட்டசபையில் மசோதா நிறைவேறியது.

சட்டசபை மசோதா

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று (அக்.11) பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியானது. அந்த வரிசையில் சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அரசு பல்வேறு ஆண்டுகளில் போக்குவரத்தில் வரி விதிப்பு முறைகளை மேற்கொண்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு வரிகளை அரசு உயர்த்தவில்லை. தற்போது வாகனங்களின் மீது விதிக்கப்படும் வரியில் இருந்து வருமானம் குறைவாக வருகிறது.

தமிழகத்தில் மேலும் 5 மாவட்டங்களுக்கான ரேஷன் கடை தேர்வு முடிவுகள் – வெளியீடு!

அதனால் மாநிலத்தின் நிதி வளத்தை உயர்த்த தமிழ்நாடு இயக்கூர்திகள் வரி விதிப்பு சட்டத்தில், நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறைகளை திருத்தம் செய்வது என அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் படி சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், ‘கேப்’கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி நிர்ணயிக்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இழுவை வண்டிகளுக்கு (டிரெய்லர்) ஏற்றப்படும் எடையின் கொள்ளளவுக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.1,800 வரை வரி உயர்த்தப்படுகிறது. புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாத நிலையில் அதன் விலையில் 10 சதவீதம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் என்றால் 12 சசதவீதம் என நிர்ணயிக்கப்படுகிறது. அதே போல 15 ஆண்டுகள் நிறைவடையாத மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 என நிர்ணயிக்கப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!