தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் – அரசு உத்தரவு!!

0
தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - அரசு உத்தரவு!!
தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - அரசு உத்தரவு!!
தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் – அரசு உத்தரவு!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து பல அதிகாரிகளை இடமாற்றம் செய்து வரும் நிலையில் தற்போது மேலும் 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அச்சம் காரணமாக தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வருகிற 21 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் தமிழகத்தில் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகிறார் முதல்வர். தற்போது அந்த வகையில் மேலும் 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது அதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்:

  • நாகை ஆட்சியராக உள்ள பிரவீன் பி.நாயர் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராக நியமனம்.
  • விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக உள்ள அண்ணாதுரை வேளாண்துறை இயக்குநராக மாற்றம்.
  • வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் கூட்டுறவுத்துறை பதிவாளராக மாற்றம்.
  • தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக உள்ள கோவிந்தராவ் குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநராக நியமனம்.
  • கோவை ஆட்சியர் நாகராஜன் நில நிர்வாக ஆணையராக மாற்றம்.
  • திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராக மாற்றம்.
  • திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நகராட்சி நிர்வாக இயக்குநராக நியமனம்.
  • அரியலூர் ஆட்சியர் ரத்னா சமூக நலத்துறை இயக்குநராக மாற்றம்.
  • சமக்ரா ஷிக்ஷாவின் மாநில திட்ட இயக்குநராக ஆர்.சுதன் மாற்றம்.
  • நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநராக சரவணவேல்ராஜ் மாற்றம்
  • தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக மரியம் பல்லவி பல்தேவ் நியமனம்.
  • தொழில்நுட்ப கல்வி இயக்குநராக லட்சுமிபிரியா நியமனம்.
  • ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா நியமனம்.
  • வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையராக வள்ளலார் நியமனம்.
  • ஆவின் மேலாண் இயக்குநராக கந்தசாமி நியமனம்.
  • சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக அன்சுல் மிஸ்ரா நியமனம்.
  • மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர் செயலராக பாஸ்கர பாண்டியன் நியமனம்.
  • நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநராக வினய் நியமனம்.
  • மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குநராக ஜெயகாந்தன் நியமனம்.
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக அமுதவல்லி நியமனம்.
  • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குநராக தட்சிணாமூர்த்தி நியமனம்.
  • சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண் இயக்குநராக விஜயராஜ்குமார் நியமனம்.
  • பேரூராட்சிகளின் இயக்குநராக செல்வராஜ் நியமனம்.
  • எல்காட் நிறுவன மேலாண் இயக்குநராக அஜய் நியமனம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!