தமிழின் தொன்மை, தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

4

தமிழின் தொன்மை, தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

தமிழின் தொன்மைக்கு உலகியல் ஆதாரங்கள்

உலகில் பழமை வாய்ந்த மொழிகள் எனக் கருதப்படும் வடமொழி, சீனம், ஹீப்ரு, இலத்தீன், கிரேக்கம் ஆகியவற்றோடு வைத்து எண்ணப்படும் பெருமையுடையது தமிழ்மொழி கி.பி.10 ஆம் நூற்றாண்டில் எகிப்து நாட்டினை ஆண்டு வந்த சலமன் என்ற அரசனுக்குத் தமிழ் மன்னர்கள் கப்பல் மூலம் மயில் தோகை, யானைத் தந்தம், குரங்குகள், அகில் ஆகியவற்றை அனுப்பி வைத்தனர். தோகை – துகில் என்றும், அகில் – அஹலத் என்றும் குரங்கைக் குறிக்கும் கவி என்ற சொல் கபிம் என்றும், பழைய ஹீப்ரு மொழியில் உள்ள விவிலிய நூலில் காணப்படுகின்றன.

வாணிபத் தொன்மை

 • பழந்தமிழ் நாட்டில் வாணிபம் வளர்ந்திருந்தது. கொடுப்பது குறைவுபடாது வாணிபம் செய்தனர். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பொருளீட்டினார்கள். நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை, வரகு, முதலிய தானிய வகைகளையும், உளுந்து, கடலை, அவரை, துவரை, தட்டை, பச்சை பயறு, கொள்ளு, எள்ளு, முதலிய பயறு வகைகளையும் தமிழர்கள் விற்றார்கள்.
 • பண்டைத் தமிழரின் கடல் வாணிகமும் தொன்மை வாய்ந்தது. தமிழகத்தில் துறைமுகப் பட்டினங்கள் பல இருந்தன. பொன், மணி, முத்து, துகில் கொண்டு கடல் கடந்து வாணிபம் செய்தனர். பூம்புகார் வணிகர்கள் வாழும் இடமாகத் திகழ்ந்தது. தமிழர்களுக்காக சாவக நாட்டுடனும் கடல் வாணிபத் தொடர்பு இருந்தது.
 • பண்டைய காலத்து வாணிபப் பொருட்கள் துறைமுக நகரங்களிலிருந்து ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர். பட்டினப் பாலையும், மதுரைக் காஞ்சியும் அவற்றை அழகுறக் கூறுகின்றன.

தொன்மைக்கான இலக்கியச் சான்றுகள்

‘தமிழ்கெழுகூடல்’ என்ற புறநானூறும் ‘தமிழ்வேலி’ என்ற பரிபாடலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக் குறிக்கின்றன. உழவுக்குச் சிறப்பு பெற்ற நிலம் மருத நிலம் வயலும் வயல் சார்ந்த இடமாக வகைப்படுத்தப்பட்டு இருந்தது. மருத நிலத்துப் பெருமை கருதியே வேந்தனை முதன்மைப்படுத்தினர் தமிழர்.

இசைக் கலைச் சான்றுகள்

 • உலக மொழி உருவம் பெறுவதற்கு முன்பே இசை பிறந்து விட்டது. பண்டைய காலத் தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. பண்கள், இசைக் கருவிகள், இசைக் கலைஞர்கள், இசைப்பாடல்கள் என இசை பற்றிய ஏராளமான குறிப்புகள் இலக்கியங்களில் உள்ளன.
 • ‘நரம்பின் மறைய’ என்று தொல்காப்பியம் உரைப்பதன் மூலம் இசை இலக்கண நூல் உண்டென உணர முடிகிறது. பாணன், பாடினி, கூத்தன், விறலி என்று இயலிசை, நாடகக் கலைஞர்கள் இருந்தமையும் அறிய முடிகிறது. ‘தாலாட்டு’ என்பது குழந்தையைத் தொட்டிலிட்டு பாடுவது ஆகும். ஒப்பாரி என்பது இவருக்கு ஒப்பார் எவருமிலர் என்று இறந்தவரைப் பற்றி பாடுவது.
 • இன்றைய கர்நாடக இசைக்குத் தாய் தமிழே பண்ணொடு தமிழொப்பாய் என்னும் தேவாரப் பண்ணும், தமிழும் பிரிக்க முடியாதென்று நவிலும், தமிழர் ஐவகை நிலத்திற்கும், ஐந்திணைக்கும் ஏற்ற பண்ணிசை வகுத்தனர்.

நிலைத்த மொழி

 • இலக்கண, இலக்கிய வளமுடைய மொழிகள் பலவாகும். இவற்றுள் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மையுடைய மொழிகள் சிலவே.
 • அவை தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஈப்ரூ, கிரேக்கம் ஆகியவை.
 • இவற்றுள் ஈப்ரூவும், இலத்தீனும் வழக்கிலிருந்து போய்விட்டது. இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளுள் நம் தமிழ் மொழியும் ஒன்றாகும். ஒரு மொழி நிலைத்து நிற்க பழமையும் வளமையும் மட்டும் போதாது. அம்மொழி பேச்சு மொழியாக எழுத்து மொழியாக, ஆட்சி மொழியாக நீதிமன்ற மொழியாக நிலைபெற வேண்டும்.
 • இவை எல்லாவற்றிற்கும் மேலாக பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகுதியாக உள்ளது. செந்தமிழ் இலக்கியங்களும், இலக்கணங்களும் காட்டும் அத்துணை உயர்ந்த மொழி பேச்சு மொழியாக இருந்திருக்காது என்கிறார் கால்டுவெல். ஏனெனில் பேச்சு மொழியிலிருந்துதான் இலக்கிய மொழியைப் புலவர்கள் உருவாக்கி இருக்க முடியும். சங்க இலக்கியம் செவ்வியல் இலக்கியமாக இருப்பதால் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் பேச்சு வடிவம் இருந்திருக்க வேண்டும்.
 • அதாவது பேச்சுமொழி  இலக்கியம் , இலக்கணம் என்ற வரிசையில் தோன்றும்.

தொல்காப்பியம்
சங்க இலக்கியம்
சங்க இலக்கியங்கள் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவை. மற்ற மொழிகளில் பயன்படுத்தப்படும் பல சொற்கள் தமிழ் மொழி உச்சரிப்புகளாகவே இருப்பது தமிழின் தொன்மைக்கு மற்றொரு சான்றாகும்.

தமிழ் மொழியின் சிறப்பு

 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களை நீக்கி விட்டாலும் இயங்கும் அளவிற்கு மிகுதியான வேர்ச்சொற்களைக் கொண்டது தமிழ்மொழி ஆகும். கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற மொழிகளுக்குத் தாயாக விளங்குவது தமிழ்மொழியாகும். 1800 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும் 180 மொழிகளுக்கு உறவுப் பெயர்களையும் தந்து உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்கிறது.
 • தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற முப்பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அகம், புறம் என்று வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்துள்ளது. திருக்குறள் மூலமாக வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தளித்துள்ளது. சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள் 26, 350 ஆகும். இந்த அளவிற்கு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகில் வேறெந்த மொழியிலும் இல்லை என்று மொழியியல் அறிஞர் கபில்சுவலபில் கூறுகின்றார்.

செம்மொழித் தமிழ்

செந்தமிழ் என்ற சொல் தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. (எச்ச நூ – 1) இலக்கண நெறிப்படி அமைந்த சொல், தொடர், செந்தமிழ் ஆகும். செந்தமிழுக்கு எதிர்மறை கொடுந்தமிழ். அதாவது இலக்கண நெறியிலிருந்து சிதைந்த சொல், தொடர் கொடுந்தமிழ் ஆகும். கொடுந்தமிழ் என்ற சொல்லை முதன் முதலாக இலக்கண உரையாசிரியரான இளம்பூரணர் என்பவர் பயன்படுத்தியுள்ளார்.

செம்மொழித் தமிழிற்கான முயற்சிகள்

 • தமிழ்மொழி ஓர் உயர்தனிச் செம்மொழி என முதன்முதலாக கூறியவர் கால்டுவெல் (1856)
 • தமிழிற்கு செம்மொழித் தகுதி கோரிய முதல் தமிழர் பரிதிமாற் கலைஞர் (1887)
  மதுரைத் தமிழ்ச் சங்க ‘செந்தமிழ்’ மாத இதழில் பரிதிமாற் கலைஞரின் ‘உயர்தனிச் செம்மொழி’ என்ற கட்டுரை வெளியிடப்பட்டது. (1901)
 • மேலைச் சிவபுரி சன்மார்க்க சபை, தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றி அதை இந்திய அரசுக்கும் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தியது. (1918) மேலும் சைவ சித்தாந்த மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியது.
 • கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் தமிழவேள் உமாமகேசுவரனார் (1923).
 • தமிழின் செம்மொழித் தகுதிகளைச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டி விளக்கியவர் தேவநேயப்பாவாணர் (1966)
 • தமிழின் செம்மொழித் தகுதிகளை திட்ப நுட்பத்துடன் வரையறுத்து அவற்றைத் தமிழிற்கு பொருத்தி விரிவாக ஆய்வு செய்தவர் மணவை முஸ்தபா. (1977)
 • தமிழ் செம்மொழி குறித்த வரலாற்றுச் சிந்தனையைத் தூண்டியவர் ஆறு.அழகப்பன் (2000)
 • பேராசிரியர் மறைமலை இலக்குவனார் கேட்டுக் கொண்டதற்கு இணங்கத் தமிழின் செம்மொழித் தகுதி பற்றிய அறிக்கையைக் கட்டுரை வடிவில் மத்திய அரசுக்குத் தெரிவித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் ஜார்ஜ். எல். ஹார்ட் (2000).
 • நிறைவாக நடுவண் அரசு செம்மொழியாக அறிவித்தது 12.10.2004 ஆகும்.

செம்மொழித் தகுதிகள்

1. தொன்மை
2. பிறமொழித் தாக்கமின்மை
3. தாய்மை
4. தனித்தன்மை
5. இலக்கிய வளம் இலக்கணச் சிறப்பு
6. பொதுமைப் பண்பு
7. நடுவு நிலைமை
8. பண்பாட்டு கலை பட்டறிவு வெளிப்பாடு
9. உயர் சிந்தனை
10. கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு
11. மொழிக் கோட்பாடு இதனை வரையறுத்துக் காட்டியவர்கள் மணவை முஸ்தபா அவர்களும் பிற மொழியில் அறிஞர்களும் ஆவர்.

செம்மொழி என்று நிறுவிய நூல்கள்

1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – டாக்டர் கால்டுவெல்
2. சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே – முனைவர் ச. அகத்தியலிங்கம்.
3. செந்தமிழ் – முனைவர் பொற்கோ.
4. செம்மொழி வரிசையில் தமிழ் – முனைவர் ஜான் சாமுவேல்.
5. தமிழ்ச் செவ்வியல் மொழி – முனைவர் மலையமான்.
6. உள்ளும் – புறமும் – மணவை முஸ்தபா
7. தமிழின் செம்மொழித் தகுதிகள் – மணவை முஸ்தபா
8. தமிழ்ச் செம்மொழி ஏன்? எதற்கு? – முனைவர் கு.வே. பாலசுப்ரமணியன்
9. தமிழ்ச் செம்மொழி ஆவணம் – பேரா.சாலினி இளந்திரையன்
10. செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள் – கலைஞர் கருணாநிதி

செம்மொழி அறிவிப்பால் தமிழிற்கு கிடைக்கும் நன்மைகள்

1. பல்கலைக்கழக மானியக் குழு தமிழைச் செம்மொழியாக ஏற்கும். இதனால் மொழிப்பாடம் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தமிழுக்கெனத் தனித்துறை ஏற்படும்.
2. உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் நாட்டிலேயே பல்கழைக்கழக அளவில் தமிழைக் கற்க முடியும்.
3. சமஸ்கிருத ஆண்டு கொண்டாடப்பட்டதைப் போன்று தமிழ் ஆண்டு கொண்டாடப்படும்.
4. மத்திய அரசு தமிழின் பன்முக வளர்ச்சிக்குத் தனியாக நிதி ஒதுக்கும்.
5. ராக்பெல்லர் பௌண்டேசன், ஃபோர்டு பௌண்டேசன் போன்ற அற நிறுவனங்கள் செம்மொழி ஆய்வுக்கு ஒதுக்கும் நிதியுதவி இனித் தமிழ் மொழி ஆய்வுக்கும் கிடைக்கும்.
6. தமிழ்ப் பேரகராதி செம்மைப்படுத்தப்படும்.
7. தமிழை அளவுகோலாகக் கொண்டு பழைய கல்வெட்டுகளும், செப்பேடுகளும், ஓலைச் சுவடிகளும் ஆராயப்படும்.
8. தமிழில் உள்ள சிறந்த இலக்கிய, இலக்கண நூல்கள் மேலைநாட்டு கீழைநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்.
9. தமிழைப் பிற செம்மொழிகளுடன் ஒப்பிட்டு ஆய்வுகள் நடைபெறும்.
10. பல புதிய ஆய்வுகளால் தமிழிற்குப் பல புதிய ஆய்வு முடிவுகள் கிடைக்கும்.

முதல் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுத் தகவல்கள்

1. மாநாடு நடந்த இடம் கோயம்புத்தூர்.
2. மாநாடு நடந்த நாட்கள் 23.06.2010 முதல் 27.06.2010 வரை ஐந்து நாட்கள்
3. மாநாட்டைத் தொடங்கி வைத்தவர் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டில்
4. மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றியவர் தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா.
5. மாநாட்டின் தொடக்க விழாவிற்கு தலைமை ஏற்றவர் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி
6. வாழ்த்துறை வழங்கியவர்கள் : ஜார்ஜ் எல்.ஹார்ட் (அமெரிக்கா) வா.செ. குழந்தைசாமி (இந்தியா) கா.சிவத்தம்பி (இலங்கை)
7. மாநாட்டின் மைய நோக்கப் பாடலை எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி
8. உலகச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத் தொடக்க விழா நடந்த நாள் 24.06.2010
9. ஆய்வரங்கத் தொடங்கி வைத்தவர் முதல்வர் கலைஞர்.மு.கருணாநிதி
10. ஆய்வரங்கைச் சிறப்பு மலரை வெளியிட்டவர் நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன்
11. ஆய்வரங்கத் தொடக்க விழாவிற்குத் தலைமை ஏற்றவர் கா.சிவத்தம்பி
12. மாநாட்டிற்காகச் செயல்பட குழுக்கள் – 21
13. ஆய்வரங்கில் கலந்து கொண்ட மொத்த அறிஞர்கள் 961 (அயல்நாடு – 215, இந்தியா  – 746)
14. முதல் செம்மொழி தமிழ் விருது (கலைஞர் பெயரில்) பெற்றவர் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பார்கோலா விருதை வழங்கியவர் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டில்.
விருது வழங்கியதற்கான காரணம் : “சிந்துவெளி நாகரீகத்தின் எழுத்தும் பண்பாடும் திராவிடர்களுக்குரியது” என்னும் கருதுகோளை ஆய்வு சான்றுகளுடன் ஆராய்ந்து நிறுவியமை. விருது மதிப்பு – ரூபாய் 10 இலட்சம் மேலும் ஐம்பொன்னாலான திருவள்ளுவர் சிலை.

செம்மொழி மாநாட்டின் தீர்மானங்கள்

1. ஐந்திணை நிலவகைகளில் பாரம்பரிய மரபணு பூங்காக்கள் அமைக்கப்படும்.
2. இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்வதற்கு முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
3. செம்மொழியாம் தமிழை மத்தியில் ஆட்சிமொழியாக்க வேண்டும்.
4. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
5. தமிழ்மொழி வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் தேவையான அளவு மானியத் தொகை வழங்கப்படும்.
6. இந்திய தேசிய கல்வெட்டியில் நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
7. பூம்புகார், குமரிக் கண்டம் ஆகிய இடங்களில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்.
8. தமிழகத்தின் ஆட்சி மொழியாகவும்ää நிர்வாக மொழியாகவும் தமிழ் ஆக்கப்பட வேண்டும் என்பது முழுமையாக நிறைவேற வேண்டும்.
9. தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்க சட்டம் இயற்றப்படும்.
10. பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் ‘தமிழ்ச் செம்மொழி’ என்ற தலைப்பு சேர்க்கப்படும்.
11. மதுரையில் தொடங்கப்பட்ட தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்’ குறிப்பிட்ட இடைவெளியில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தும்.
12. 2010-இல் செம்மொழி மாநாட்டில் ஆய்வு மையம் மற்றும் நூலகம் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் (பழைய தலைமை செயலகம்) தொடங்கப்பட்டது.
13. உலகச் செம்மொழி மாநாட்டில் தமிழ் இணைய மாநாட்டைத் தொடங்கிவைத்தவர் சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன். செம்மொழித் தமிழில் தோன்றிய இலக்கியங்கள் ‘செவ்வியல்’ பண்பு பெற்று விளங்குகின்றன.

இலக்கிய செவ்வியல் தன்மைகள்

1. தொன்மை
2. முன்மை
3. எளிமை
4. ஒளிமை
5. இளமை
6. வளமை
7. தாய்மை
8. தூய்மை
9. செம்மை
10. மும்மை
11. இனிமை
12. தனிமை
13. பெருமை
14. திருமை
15. இயன்மை
16. வியன்மை என்று 16 தன்மைகளைக் கொண்டு விளங்குகிறது.

திராவிட மொழி தொடர்பான – செய்திகள்

இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையும்
1. இந்தோ – ஆசிய மொழிகள்
2. திராவிட மொழிகள்
3. ஆஸ்திரேலிய – ஆசிய மொழிகள், சீன – திபெத்திய மொழிகள் என மொழியியல் அறிஞர்கள் நான்கு மொழிக் குடும்பங்களில் அடக்குவர். மூல மொழியில் இருந்து தோன்றியவை கிளை மொழிகள் இதனைப் பொதுத்தன்மையின் அடிப்படையில் அவற்றை ஒரே மொழிக் குடும்பமாக அடக்குவர். இந்திய நாட்டை மொழிகளின் காட்சி சாலை எனக் குறிப்பிட்டுள்ளார். மொழியியல் பேராசிரியர் ச.அகத்தியலிங்கம். இந்தியாவில் மொத்தம் 12 மொழிக் குடும்பங்கள் உள்ளன.

திராவிடக் குடும்பங்கள்

இருபத்து மூன்றுக்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் உள்ளன.
1. தென் திராவிட மொழிகள்
2. நடு திராவிட மொழிகள்
3. வட திராவிட மொழிகள் என மூன்று குடும்பங்கள் உள்ளன.

திராவிடம்

 • திராவிட என்னும் சொல்லே தமிழ் – என்னும் சொல்லிலிருந்து உருவானதாகும். என்று ஈராஸ் பாதிரியார் குறிப்பிடுகிறார்.
 • தமிழ் -> திரமிள -> திரவிட என உருவானதாக அவர் கூறுகின்றார்.
 • திராவிடம் என்ற சொல்லை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர் கால்டுவெல்.
 • திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழி ஆகும்.
 • திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரீகம் முதலிய சொற்றொடர்களில் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கால்டுவெல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். திராவிட மொழிகளுள் மிகவும் தொன்மையான பண்பட்ட மொழி தமிழே.
 • இந்தியத் திராவிட மொழிகள் ஆறு.
  1. தமிழ்               4. கன்னடம்
  2. தெலுங்கு         5. துளு
  3. மலையாளம்    6. குடகு மொழிகள் வழங்கி வரும் இடத்தைப் பொருத்து தென் திராவிடம், வட திராவிடம் என்று பிரிப்பர்.

PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும

Telegram Channel கிளிக் செய்யவும்

 

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!