தமிழகத்தில் நவ.11 வரை இம்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் நவ.11 வரை இம்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் நவ.11 வரை இம்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் நவ.11 வரை இம்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

தமிழகம் முழுவதும் ஏற்கனவே பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்து வரும் 2 நாட்களுக்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

வானிலை அறிக்கை:

வட தமிழகம்‌ மற்றும்‌ அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில்‌ (3.1கிலோமீட்டர்‌ உயரம்‌ வரை) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக,

07.11.2021: சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, கடலூர்‌, விழுப்புரம்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடண்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌ சில நேரங்களில்‌ அதி கனமழையும்‌, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கரூர்‌, திருச்சராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர்‌, கள்ளக்குறிச்‌௪சி, சேலம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்ராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்யக்கூடும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

08.11.2021: சென்னை, விழுப்புரம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கரூர்‌, திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர்‌, கள்ளக்குறிச்‌சி, சேலம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

VI, Airtel, Jio பயனர்கள் கவனத்திற்கு – ரூ.50 ரீசார்ஜில் இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகள்!

09.11.2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, டெல்டா மாவட்டங்கள்‌, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

10.11.2021: வட தமிழக கடலோர மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌ சில நேரங்களில்‌ அதி கனமழையும்‌, வடக்கு கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ இடங்களில்‌ ஓரிரு இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்கள் பள்ளிகள் விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!

11.11.2021: வட தமிழக கடலோர மாவட்டங்கள்‌ அதனை ஒட்டியுள்ள உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌ சில நேரங்களில்‌ அதி கனமழையும்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு,கிருஷ்ணகிரி உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, டெல்டா மாவட்டங்கள்‌, மதுரை, விருதுநகர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ கன முதல்‌ மிக கன மழையும்‌, ஓரிரு இடங்களில்‌ அதி கன மழையும்‌ பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 27 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ கன முதல்‌ மிக கன மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 27 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌. ஆழ்கடலில்‌ (வங்க கடல்‌) உள்ள மீனவர்கள்‌ 9 ஆம்‌ தேதிக்குள்‌ கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

07.11.2021, 08.11.2021 தேதிகளில் மத்தியகிழக்கு அரபிக்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 70 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. எனவே, மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

வங்க கடல்‌ பகுதிகள்‌:

07.11.2021, 08.11.2021: தென்‌ மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள்‌, வட தமிழக கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

09.11.2021: தெற்கு வங்க கடல்‌ மற்றும்‌ மத்திய வங்க கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

TN TRB போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – புதிய சிக்கல்!

10.11.2021, 11.11.2021: தமிழ்நாடு கடலோர பகுதிகள்‌, குமரி கடல்‌, மன்னார்‌ வளைகுடா, ஆந்திர கடலோர பகுதிகள்‌, தென்‌ மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. ஆழ்கடலில்‌ உள்ள மீனவர்கள்‌ 9 ஆம்‌ தேதிக்குள்‌ கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!