தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!  

0
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!  

தமிழகத்தில் வறண்ட வானிலையும் ஒரு சில இடங்களில் லேசான மழை பொழிய வாய்ப்பு  உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

சென்னை வானிலை ஆய்வு மையம் ஆனது தமிழகத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை பற்றிய அறிவிப்பை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது வெளியான அறிவிப்பின் படி, இன்று முதல் அடுத்த இரண்டு தினங்களுக்கும், 23.03.2024 அன்றும் தமிழகம், புதுவை, காரைக்கால்  பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். மேலும் 20.03.2024 அன்று முதல் 22.03.2024 அன்று வரை இப்பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் முக்கிய பகுதியான சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதுமட்டுமின்றி இப்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 33 – 34°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 – 26°C ஆகவும் பதிவாக வாய்ப்புள்ளது. நேற்றைய தினம் (மார்ச் 16) அதிகபட்ச வெப்ப நிலையான 38.6°C ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்திலும், குறைந்தபட்ச வெப்பநிலையான 20.0°C நாமக்கல் மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை TIDCO நிறுவனத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும் || ரூ.1,00,000/- மாத ஊதியம்!     

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!