T20 உலக கோப்பை தொடர் 2020: இந்திய அணி உத்தேச பட்டியல் – இளம் வீரர்களுக்கு வாய்ப்பு?

0
T20 உலக கோப்பை தொடர் 2020 இந்திய அணி உத்தேச பட்டியல் - இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
T20 உலக கோப்பை தொடர் 2020 இந்திய அணி உத்தேச பட்டியல் - இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

T20 உலக கோப்பை தொடர் 2020: இந்திய அணி உத்தேச பட்டியல் – இளம் வீரர்களுக்கு வாய்ப்பு?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள T20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் 2 வில் களமிறங்குகிறது. அதற்கான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என ரசிகர்கள் எதிர்பாரத்து வருகின்றனர்.

T20 உலக கோப்பை தொடர் 2020:

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த T20 உலக கோப்பை தொடர் ஆனது கொரோனா தொற்றின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. IPL போட்டிகளும் கடந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறாமல் செப்டம்பர் – நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகள் ரசிகர்கள் இல்லாமலேயே நடத்தப்பட்டது.

அதேபோல் ஒத்திவைக்கப்பட்ட T20 உலக கோப்பை தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் இல்லாமலேயே நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான போட்டி அட்டவணைகள் சமீபத்தில் தான் வெளியாகின. இந்த தொடர் வரும் அக்டோபர் 17 அன்று தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெற்று முடியும். கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் குரூப்-2வில் இடம் பெற்றுள்ளன.

தமிழக கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி – விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

இதில் கலந்து கொள்ளும் அணிகள் தங்களின் வீரர் விவரங்களை அறிவித்து வருகின்றன. ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் அனுபவம் வாய்ந்த வீரர்களின் அணிவகுப்பாக தங்களின் அணியை அறிவித்து உள்ளது. இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை இன்னும் பிசிசிஐ அறிவிக்கவில்லை. இந்திய அணியை பொறுத்தவரை எப்பொழுதும் 6 பேட்ஸ்மன்களுடனே களமிறங்கும். தற்போது அணியில் இளம் வீரர்களில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் போன்றோர் நல்ல பார்மில் உள்ளனர். மூத்த வீரர்களில் ரோஹித், கோஹ்லி, தவான், ராகுல் என அனைவரும் பார்மில் உள்ளதால் ஆல் ரவுண்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் சிக்கல் எழுகிறது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அரபு நாடு மைதானங்கள் சுழற்பந்து வீச்சிற்கு சாதமாக இருக்கும் என்பதனால் சஹல், ஜடேஜா உடன் மற்றொரு வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது சந்தேகம் தான். பேட்ஸ்மன்கள் அதிகம் இருப்பதால் பாண்டியா சகோதரர்களை போன்ற ஆல் ரவுண்டர்களின் இடம் கேள்விக்குறி. வேகப்பந்து வீச்சில் தாக்குர், சஹார், பும்ராஹ், புவனேஸ்வர் குமார் ஆகியோரில் இருவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய அணி உத்தேச பட்டியல்:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!