Home news நவ.9 இல் மதுரை திருப்பரங்குன்றம் சூரசம்ஹார நிகழ்வு – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

நவ.9 இல் மதுரை திருப்பரங்குன்றம் சூரசம்ஹார நிகழ்வு – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

0
நவ.9 இல் மதுரை திருப்பரங்குன்றம் சூரசம்ஹார நிகழ்வு – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!
நவ.9 இல் மதுரை திருப்பரங்குன்றம் சூரசம்ஹார நிகழ்வு - பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!
நவ.9 இல் மதுரை திருப்பரங்குன்றம் சூரசம்ஹார நிகழ்வு – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோயிலில் நவம்பர் 9ல் சூரசம்ஹார நிகழ்வின் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்:

கடந்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் விளைவாக தற்போது கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரிகளில் இனிமேல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படாது, நேரடி முறையில் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக வனக் காவலர்களுக்கு ரூ.11,820 ஆக சம்பள உயர்வு – கோரிக்கை ஏற்பு!

இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அதனை தொடர்ந்து ஆண்டுதோறும் மதுரை திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹார நிகழ்வின் போது லட்சக்கணக்கில் போது மக்கள் திரளுவார்கள். இந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற இருக்கிறது. அதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்றோர் கவனத்திற்கு – 17,719 சிறப்பு பேருந்துகள்!

அதன்படி திருப்பரங்குன்றம் கோயிலில் நவம்பர் 9ல் சூரசம்ஹார நிகழ்வின்போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயில் வளாகத்திலுள்ள திருவாச்சி மண்டபத்தில் 9ம் தேதி மாலை 4.30 – 5.30 வரை சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். நவம்பர் 9ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here